சிங்கப்பூரில் 33,100 வேலை தேடுபவர்களுக்கு வேலை வாய்ப்புகள் அல்லது பயிற்சி வழங்கப்பட்டுள்ளது..!

சிங்கப்பூரில் வேலை செய்ய "பெஸ்ட் நிறுவனம்" எது ? - நல்ல சம்பளம், சமமாக நடத்துதல், முன்னேற்றம்
(Photo Credit : Ministry of Manpower/FB)

சிங்கப்பூரில் COVID-19 நெருக்கடி காலத்திலும் 33,100 உள்ளூர் வேலை தேடுபவர்கள் பல்வேறு அரசாங்க முயற்சிகள் மூலம் வேலைகள் மற்றும் பயிற்சி இடங்களைக் கண்டறிந்துள்ளனர்.

இது ஆகஸ்ட் மாத இறுதிக்குள் உருவாக்கப்பட்ட SGUnited வேலைகள் மற்றும் திறன் தொகுப்பின் ஒரு பகுதியாக 117,500 புதிய வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : பாதுகாப்பான நாடுகளுடன் மீண்டும் விமான பயணத்தை தொடங்க சிங்கப்பூர் பேச்சுவார்த்தை..!

மனிதவள அமைச்சர் ஜோசபின் தியோ தனது வாராந்திர வேலைவாய்ப்பு அறிக்கையில், 100,000 வேலைகள் மற்றும் திறன் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக மே மாதம் அறிவிக்கப்பட்ட SGUnited வேலைகள் மற்றும் திறன் தொகுப்பின் கீழ் இந்த வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், ஜூலை மாத இறுதி முதல் ஆகஸ்ட் மாத இறுதி வரை 25,500 வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சுமார் 17,000 வேலைகள் மற்றும் சுமார் 7,900 நிறுவனத்தால் வழங்கப்பட்ட வாய்ப்புகள் மற்றும் பயிற்சிகள் அடங்கும்.

வேலை வாய்ப்புகளை அதிகமாக வழங்கும் முதல் ஐந்து துறைகளில் தகவல் தொடர்பு, சுகாதாரம், தொழில்முறை சேவைகள், நிதி மற்றும் காப்பீடு மற்றும் உற்பத்தி ஆகிய துறைகளாகும்.

செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் தியோ கூறுகையில், இது ஒரு நல்ல முன்னேற்றமாகும் ஏனெனில் இந்த முன்னேற்றம் வாய்ப்புகளை ஒன்றிணைப்பதில் மட்டுமல்லாமல், மக்களை அவற்றில் சேர்ப்பதிலும் நல்ல முன்னேற்றமும் இருக்கிறது என்று தெரிவித்தார்.

ஜூலை மாத இறுதியில் வேலை தேடிவந்த 24,000 பேருக்கு வாய்ப்புகள் கிடைத்தது.

இது ஆகஸ்ட் மாத இறுதியில் 9,100 பேராக அதிகரித்து 33,100 பேருக்கு வேலை கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை மூலம் இன்னும் பல வேலை தேடுபவர்களுக்கு வேலை வழங்கப்படுவதால் இது தொடர்ந்து அதிகரிக்கும் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சாங்கி ஏர்போர்ட் பரபரப்பான விமான நிலையம் என்ற பட்டியலில் 58வது இடத்திற்கு சரிவு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…