சிங்கப்பூர்வாசிகளுக்கு “எங்கும் பயணிக்காத சொகுசுக் கப்பல்” அனுபவம்.. அடுத்த மாதம் முதல்..!

cruises to nowhere Genting Cruise Lines Royal Caribbean
(Photo: Wikimedia Commons/Arno Redenius)

மேம்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் கட்டாய COVID-19 சோதனைகளுடன், சிங்கப்பூர் குடியிருப்பாளர்களுக்கு நவம்பர் முதல் “எங்கும் பயணிக்காத சொகுசுக் கப்பல்” பயண அனுபவத்தை வழங்க இரண்டு கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜென்டிங் குரூஸ் லைன்ஸ் (Genting Cruise Lines) சொகுசுக் கப்பல், நவம்பர் 6ஆம் தேதி அந்த பயணங்களை வழங்கத் தொடங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் பூன் லே ஷாப்பிங் சென்டரில் இளைஞருக்கு கத்திக்குத்து – ஒருவர் கைது..!

அதே நேரத்தில், ராயல் கரீபியன் (Royal Caribbean) இன்டர்நேஷனலின் குவாண்டம் ஆஃப் தி சீஸ், சொகுசுக் கப்பல் பயணம் டிசம்பரில் தொடங்கும் என்று சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் (STB) வியாழக்கிழமை (அக். 8) செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இது சிங்கப்பூர் குடியிருப்பாளர்களுக்கு அதிகபட்சமாக 50 சதவீதம் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர், மற்ற துறைமுகங்கள் செல்லாத வகையில் இந்த சுற்று பயணங்கள் இருக்கும் என்று STB தெரிவித்துள்ளது.

பயணத்திற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை தீர்மானிப்பதற்கு முன், வரும் மாதங்களில் இதன் பலன் குறித்து அரசாங்கம் கவனமாக கண்காணிக்கும் என்றும் STB தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் வணிக நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கும், உள்நாட்டு சுற்றுலாத் துறைக்கு மிகவும் தேவையான ஊக்கத்தை அளிப்பதற்கும், மீண்டும் நடவடிக்கைகளை தொடங்கிய முதல் கப்பலாக இருப்பதில் தாங்கள் மகிழ்ச்சியடைவதாக ட்ரீம் குரூஸின் தலைவர் மைக்கேல் கோ கூறியுள்ளார்.

இதையும் படிங்க : லிட்டில் இந்தியா உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி சோதனை – பலர் கைது..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…