‘பயன்படுத்தப்படாத CDC பற்றுச்சீட்டுகளை நன்கொடையாக வழங்கலாம்’ என அறிவிப்பு!

Photo: CDC Vouchers

 

சிங்கப்பூரில் வசிக்கும் சிங்கப்பூரர் குடும்பங்கள் தாங்கள் பயன்படுத்தாத சமூக மேம்பாட்டு பற்றுச்சீட்டுகளை (CDC Vouchers Scheme 2023) தாங்கள் விரும்பும் தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கலாம். இந்த பற்றுச்சீட்டுகளை நன்கொடையாக வழங்கும் நடைமுறை வரும் டிசம்பர் மாதம் 1- ஆம் தேதி தொடங்கி, அடுத்தாண்டு ஜனவரி மாதம் 31- ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு குடைகள், சூடான சமோசாக்களை வழங்கிய ‘ItsRainingRaincoats’!

குறைந்தது 1 சிங்கப்பூரர் உள்ள அனைத்து வீடுகளும் தலா 300 வெள்ளி மதிப்பிலான பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் மட்டும் சுமார் 10,000- க்கும் மேற்பட்ட குடும்பங்கள், சமூக மேம்பாட்டு பற்றுச்சீட்டுகளை நன்கொடையாக வழங்கியுள்ளனர். இதன் மதிப்பு 1.19 வெள்ளி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் லாரி ஓட்டுநராகப் பணிபுரியும் வெளிநாட்டவர்.. கடும் விபத்தில் சிக்கி தீவீர சிகிச்சை பிரிவில் அனுமதி

பற்றுச்சீட்டுகளை நன்கொடையாக அளிக்க விரும்புவோர் https://vouchers.cdc.gov.sg/ என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று, சிங்பாஸ் (SingPass) மூலம் மூலமாக நன்கொடையாக அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக மேம்பாட்டு பற்றுச்சீட்டுகள் செல்லுபடியாகும் காலம் வரும் டிசம்பர் 31- ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.