‘CDC’ வவுச்சர்களைப் பயன்படுத்தி இந்த பொருட்களை வாங்க முடியாது- விரிவான தகவல்!

'CDC' வவுச்சர்களைப் பயன்படுத்தி இந்த பொருட்களை வாங்க முடியாது- விரிவான தகவல்!

 

சிங்கப்பூரில் குறைந்த வருமானங்களைக் கொண்ட ஒவ்வொரு சிங்கப்பூரர்களின் குடும்பங்களுக்கும் (Singaporean Households) சுமார் 500 வெள்ளி மதிப்புள்ள சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகள் (Community Development Council- ‘CDC’) என்றழைக்கப்படும் ‘CDC’ வவுச்சர்கள், ஜனவரி 03- ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.

லிட்டில் இந்தியாவில் விழுந்த மரம்.. கார், லாரி உட்பட 6 வாகனங்கள் பாதிப்பு

250 வெள்ளி மதிப்பிலான இரண்டு வவுச்சர்கள் ஒவ்வொரு சிங்கப்பூரர் குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இதில், ஒரு 250 வெள்ளி மதிப்பிலான வவுச்சர்களை சூப்பர் மார்க்கெட்டுகளில் (Super Markets) மட்டுமே பயன்படுத்திப் பொருட்களை வாங்க முடியும். மற்றொரு 250 வெள்ளி மதிப்பிலான வவுச்சர்களைப் பயன்படுத்தி ஹார்ட்லேண்ட் வணிகர்கள் (Heartland Merchants) மற்றும் வியாபாரிகளிடம் (Hawkers) பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ்நாட்டில் சிங்கப்பூர் நிறுவனங்கள் ரூபாய் 31,000 கோடி முதலீடு”- சிங்கப்பூர் தூதரகம் அறிவிப்பு!

இதனிடையே, ‘CDC’ வவுச்சர்களைப் பயன்படுத்தி மதுபானங்கள், சிகரெட்டுகள், டீசல், பெட்ரோல், லாட்டரி போன்ற பொருட்களை வாங்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கூடுதல் விவரங்களுக்கு https://vouchers.cdc.gov.sg/ என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று பார்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.