“தமிழ்நாட்டில் சிங்கப்பூர் நிறுவனங்கள் ரூபாய் 31,000 கோடி முதலீடு”- சிங்கப்பூர் தூதரகம் அறிவிப்பு!

"தமிழ்நாட்டில் சிங்கப்பூர் நிறுவனங்கள் ரூபாய் 31,000 கோடி முதலீடு"- சிங்கப்பூர் தூதரகம் அறிவிப்பு!
File Photo

 

தமிழ்நாட்டில் சிங்கப்பூர் நிறுவனங்கள் ரூபாய் 31,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக சிங்கப்பூர் தூதரகம் அறிவித்துள்ளது.

நடுவராக பழ.கருப்பையா பங்கேற்கும் ‘பொங்கல் பட்டிமன்றம்’- அனைவரும் பங்கேற்குமாறு லிஷா அழைப்பு!

‘தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு- 2024’ சென்னையில் உள்ள நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று (ஜன.07) தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை இன்று (ஜன.07) காலை 10.00 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், அமெரிக்கா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர். அதேபோல், பல்வேறு நாடுகளின் தூதர்களும், தொழிலதிபர்களும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் சிங்கப்பூர் நிறுவனங்கள் செய்யவுள்ள துறை வாரியான முதலீடுகள் குறித்து இந்தியாவிற்கான சிங்கப்பூர் தூதரகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சென்னையில் ஜனவரி 07, 08 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள ‘தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு- 2024’- ல் சிங்கப்பூர் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர்.

“L1 புள்ளியில் வெற்றிகரமாக ஆதித்யா விண்கலம் நிலைநிறுத்தம்!”

தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்ப பூங்கா, உள்கட்டமைப்பு உள்ளிட்டத் துறைகளில் சிங்கப்பூர் நிறுவனங்கள் முதலீடு செய்யவுள்ளன. தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கும் சிங்கப்பூரைச் சேர்ந்த செம்ப்கார்ப் (SembCorp), கேபிட்டாலேண்ட் (CapitaLand), YCH, Blue Planet உள்ளிட்ட ஏழு நிறுவனங்கள் ரூபாய் 31,000 கோடி அளவுக்கு தமிழ்நாட்டில் முதலீடுகளை செய்யவுள்ளனர்.

மாநாட்டில் சிங்கப்பூர் தூதர் சைமன் வோங் (Singapore High Commissioner to India Simon Wong) மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சிங்கப்பூர் நிறுவனங்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன. அதேபோல், சிங்கப்பூர் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளும், முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கின்றனர். இவ்வாறு சிங்கப்பூர் தூதரகம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.