“L1 புள்ளியில் வெற்றிகரமாக ஆதித்யா விண்கலம் நிலைநிறுத்தம்!”

"L1 புள்ளியில் வெற்றிகரமாக ஆதித்யா விண்கலம் நிலைநிறுத்தம்!"
Photo: ISRO

 

சூரியனை ஆய்வுச் செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா விண்கலம் வெற்றிகரமாக L1 புள்ளியைச் சென்றடைந்தது. விண்கலம் செங்குத்தான சுற்றுவட்டப்பாதையில் சூரியனை நோக்கி நிலை நிறுத்தப்பட்டதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) அறிவித்துள்ளது.

நடுவராக பழ.கருப்பையா பங்கேற்கும் ‘பொங்கல் பட்டிமன்றம்’- அனைவரும் பங்கேற்குமாறு லிஷா அழைப்பு!

கடந்த 2023- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 02- ஆம் தேதி இஸ்ரோவால் செலுத்தப்பட்ட ஆதித்யா விண்கலம் 127 நாட்கள் பயணத்திற்கு பிறகு L1 புள்ளியை அடைந்தது. ஆதித்யா விண்கலம் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள L1 புள்ளியை தற்போது சென்றடைந்துள்ளது.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சுற்றுவட்டப்பாதையில் சுற்றியபடி சூரியன் குறித்து ஆதித்யா ஆய்வு மேற்கொள்ளும். L1 புள்ளியில் இருந்தபடி சூரியனை குறித்து ஆதித்யா விண்கலம் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது. L1 புள்ளியை மையமாகக் கொண்ட சூரிய ஒளி வட்டப்பாதையில் (Halo Orbit) ஆதித்யா விண்கலம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

“தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூபாய் 3,500 கோடிக்கு ஒப்பந்தம்”- சிங்கப்பூர் தூதரகம் தகவல்!

L1 புள்ளியை ஆதித்யா விண்கலம் வெற்றிகரமாக சென்றடைந்தது மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது; விஞ்ஞானிகளின் இடைவிடாத கடின உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் இது ஒரு சான்றாகும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு இந்திய குடியரசுத் தலைவர், இந்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் வாழ்த்தும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.