நடுவராக பழ.கருப்பையா பங்கேற்கும் ‘பொங்கல் பட்டிமன்றம்’- அனைவரும் பங்கேற்குமாறு லிஷா அழைப்பு!

நடுவராக பழ.கருப்பையா பங்கேற்கும் 'பொங்கல் பட்டிமன்றம்'- அனைவரும் பங்கேற்குமாறு லிஷா அழைப்பு!
Photo: LISHA/FACEBOOK

 

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சிங்கப்பூரில் பொங்கல் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. குறிப்பாக, லிஷா அமைப்பு பொங்கல் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. அந்த வகையில், பொங்கல் ஒளியூட்டு 2024, நாளை (ஜன.06) மாலை 05.00 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான நிகழ்ச்சி கிளைவ் தெருவில் உள்ள அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

சிங்கப்பூரில் வேலை செய்யும், வருகை தரும் வெளிநாட்டினர் இதை செய்ய வேண்டாம் – ஜன.4 அன்று வெளியான எச்சரிக்கை

அத்துடன், ஜனவரி 06- ஆம் தேதி முதல் ஜனவரி 20- ஆம் தேதி வரை நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளுக்கு லிஷா ஏற்பாடு செய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, வரும் ஜனவரி 07- ஆம் தேதி அன்று மாலை 07.00 மணிக்கு லிட்டில் இந்தியாவில் உள்ள கிளைவ் தெருவில் (Poli@Clive Street) உள்ள அரங்கத்தில் நடைபெறும் பொங்கல் பட்டிமன்றத்தில் நடுவராக பிரபல பேச்சாளர் பழ.கருப்பையா கலந்துக் கொள்ளவிருக்கிறார்.

சாங்கி விமான நிலையத்தின் “கிராண்ட் டிரா” போட்டி

சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டு பட்டிமன்றத்தைக் கண்டுக்களிக்குமாறு லிஷா அழைப்பு விடுத்துள்ளது. பொங்கல் பட்டிமன்றத்திற்கு அனுமதி முற்றிலும் இலவசம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.