“தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூபாய் 3,500 கோடிக்கு ஒப்பந்தம்”- சிங்கப்பூர் தூதரகம் தகவல்!

"தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூபாய் 3,500 கோடிக்கு ஒப்பந்தம்"- சிங்கப்பூர் தூதரகம் தகவல்!
Photo: Singapore in India

 

‘தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு- 2024’ சென்னையில் உள்ள நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நாளை (ஜன.07) தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நாளை (ஜன.07) காலை 10.00 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.

ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் மகர விளக்கு திருவிழா!

இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், அமெரிக்கா, இலங்கை, ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி தொழில் நிறுவனங்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ரூபாய் 5.5 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. மாநாட்டில் முதலீடு புரிந்துணர்வு ஒப்பந்தம், தொழிற்கொள்கை, கருத்தரங்குகள், கண்காட்சி நடைபெறுகிறது.

நடுவராக பழ.கருப்பையா பங்கேற்கும் ‘பொங்கல் பட்டிமன்றம்’- அனைவரும் பங்கேற்குமாறு லிஷா அழைப்பு!

சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து இந்தியாவில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ஜனவரி 07- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூர் நிறுவனங்கள்- தமிழ்நாடு அரசுக்கு இடையே ரூபாய் 3,500 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அத்துடன், சிங்கப்பூருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சிங்கப்பூர் அமைச்சர்களைச் சந்தித்த புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்துள்ளது.