உலகிலேயே மிக பரபரப்பான விமான நிலையம் துபாய்.. 5 வது இடத்தில் சாங்கி விமான நிலையம்

changi airport dubai airport Busiest International Airports
Image: placify.in

சர்வதேச விமான பயணிகளின் வரத்தை அடிப்படையாகக் கொண்டு 2023 ஆம் ஆண்டில் சிறந்த 10 பரபரப்பான சர்வதேச விமான நிலையங்களுக்கான வருடாந்திர தரவரிசை வெளியானது.

இந்த பட்டியலில் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

அசால்ட்டாக வளம் வந்த “கருநாகப்பாம்பு” – சிங்கப்பூரில் அதிகம் காணப்படாத காட்சி

சாங்கி விமான நிலையம் சுமார் 36.1 மில்லியன் பயணிகள் வரத்தை எட்டியது, 2022 உடன் ஒப்பிடும்போது இது 66% அதிகம் ஆகும்.

இந்த பட்டியலில் முதலிடத்தை துபாய் சர்வதேச விமான நிலையம் பெற்றது.

அங்கு சுமார் 57 மில்லியன் பயணிகள் வந்து சென்றதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன, 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 25% அதிகம் ஆகும்.

சுமார் 47 மில்லியன் பயணிகளுடன் லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

மேலும், 37.2 மில்லியன் பயணிகளுடன் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையம் (AMS) மூன்றாவது பரபரப்பான சர்வதேச விமான நிலையமாக தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டது.

பிரான்ஸ் நாட்டின் ‘Paris Charles de Gaulle’ விமான நிலையம் நான்காவது இடத்தை பிடித்தது.

இஸ்தான்புல் விமான நிலையம் ஆறாவது இடத்தையும், தென்கொரிய நாட்டின் இஞ்சியோன் விமான நிலையம் ஏழாவது இடத்தையும், ஜெர்மனி நாட்டின் ப்ராங்ஃபோர்ட் (Frankfurt) விமான நிலையான எட்டாவது இடத்தையும், கத்தார் நாட்டின் தோஹா விமான நிலையம் ஒன்பதாவது இடத்தையும், ஸ்பெயின் நாட்டின் ‘Madrid Adolfo Suarez-Barajas’ விமான நிலையம் பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளது.

துவாஸ் அருகே ஏற்பட்ட விபத்தில் இரு வெளிநாட்டு ஊழியர்கள் மரணம்