சாங்கி விமான நிலைய ஊழியர்களுக்கு வைட்டமின் சி பவுடர் அடங்கிய தொகுப்பு வழங்கல்!

Photo: Changi Airport Official Facebook Page

 

கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகளை அந்தந்த நாடுகள் முடுக்கிவிட்டுள்ளன. குறிப்பாக, இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றன. அதேபோல் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அந்தந்த நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

 

அந்த வகையில் சிங்கப்பூர் நாட்டில் பல்வேறு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிங்கப்பூர் அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. சிங்கப்பூரில் முக்கிய சர்வதேச விமான நிலையமாக திகழ்வது சாங்கி சர்வதேச விமான நிலையம் (Changi International Airport).

 

இந்த நிலையில், சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் (Changi International Airport Employees) அனைவருக்கும் சானிடைசர், வைட்டமின் சி பவுடர் உள்ளிட்டவை அடங்கிய கொரோனா தடுப்பு தொகுப்பு வழங்கப்பட்டது. இதன் மூலம் எங்கள் விமான ஊழியர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டதோடு, அவர்களின் நலனையையும் கவனித்துக் கொள்ள நாங்கள் உறுதிச் செய்கிறோம் என்று விமான நிலையத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், எங்கள் விமான நிலையத்தின் பங்குதாரரான டினாட்டாவுடன் (Dnata) இணைந்து விமான நிலைய ஊழியர்களுக்கு உணவு நேரங்களில் மலிவு விலையில் டி- லிஸ் உணவு வாகனங்கள் (D- Lish Food Trucks) மூலம் உணவு மற்றும் குளிர்பானங்கள் (F&B) வழங்கப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த தகவலை சாங்கி விமான நிலையத்தின் நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.