சிங்கப்பூர் சாங்கி விமான நிலைய குழுமத்துடன் Jetstar நிறுவனம் பேச்சுவார்த்தை

Photo: Jetstar Asia

ஜெட்ஸ்டார் (Jetstar) விமான நிறுவனம் டெர்மினல் 4க்கு மாறுவது குறித்து சிங்கப்பூர் சாங்கி ஏர்போர்ட் மற்றும் Jetstar குழுமமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Jetstar குழுமம் டெர்மினல் 4க்கு மாற மறுத்ததைத் தொடர்ந்து இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. இந்த மாற்றத்தினால் விமானத்தின் செயல்பாடுகள், பயணிகளின் தேவைகள் பாதிக்கப்படும் என அந்நிறுவனம் கூறியது.

சிங்கப்பூரில் வேலை தேடும் சிலருக்கு நற்செய்தி: புதிய Work Pass அறிமுகம்

இந்நிலையில், விமானத்தின் செயல்பாடுகள் திறம்பட செயல்படுவதையும், பயணிகளின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதையும் உறுதி செய்ய இந்த பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சிங்கப்பூர் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் நேற்று (ஆகஸ்ட் 30) ​​தெரிவித்தார்.

இதை விரைந்து முடிப்பதை விட சிறப்பாகச் செய்து முடிப்பது முக்கியம் என்று திரு ஈஸ்வரன் கூறினார்.

கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக இரண்டு வருட இடைவெளியைத் தொடர்ந்து, அடுத்த மாதம் 13 ஆம் தேதி டெர்மினல் 4 மீண்டும் திறக்கப்பட உள்ளது.

டெர்மினல் 4 மீண்டும் திறக்கப்பட்ட உடன், ​​செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 16 விமான நிறுவனங்கள் அந்த டெர்மினலுக்கு மாறும் என கூறப்பட்டது.

சிங்கப்பூரில் வேலை செய்த ஊழியரின் கொடூரம்… சொந்த வீட்டில் இடமில்லையா? தந்தையை அடித்து கொன்ற கொடூர மகன்