ஜூவல் சாங்கி விமான நிலைய மாடியில் இருந்து விழுந்த வெளிநாட்டவர்

ஜூவல் சாங்கி விமான நிலைய
Social media

ஜூவல் சாங்கி விமான நிலையத்தின் முதல் மாடியில் இருந்து வெளிநாட்டவர் ஒருவர் கீழே விழுந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை (மார்ச் 23) அன்று நடந்த இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் தீயாக பரவியது.

டாக்ஸிக்காக காத்திருக்கும் வரிசை கம்பியில் பட்டு பின்னர் அவர் தரையில் விழுந்ததாக கூறப்படுகிறது. அவர் முகம் குப்புறக் கிடப்பதை காண முடிந்தது.

அதன் பின்னர் அவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்று மாலை 4 மணியளவில் அந்த ஆடவர் கீழே விழுந்ததைக் கண்ட பல பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

அவர் எப்படி விழுந்தார், அவரின் நிலை என்ன ஆனது என்ற விவரங்கள் வெளியாகவில்லை.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிங்கப்பூரில் வங்கி கணக்கு உடையவரா நீங்கள்.. இந்த பதிவு உங்களுத்தான்