சிங்கப்பூரில் வங்கி கணக்கு உடையவரா நீங்கள்.. இந்த பதிவு உங்களுத்தான்

சிங்கப்பூரில் வங்கி கணக்கு
Photo: Getty

சிங்கப்பூரில் வங்கி கணக்கு உடைய நபர்களுக்கு உதவும் நோக்கில் பாதுகாப்பு அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

HSBC, Maybank மற்றும் Standard Chartered ஆகிய வங்கி வாடிக்கையாளர்கள் மோசடியில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள மனி லாக் (Money lock) அம்சம் வழங்கப்பட உள்ளது.

நிறுவனத்தில் 10 ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியருக்கு புத்தம் புதிய கார் – “வாக்குகளை நிறைவேற்றுவதில் முதலாளி சிறந்தவர்”

இதில் ஒரு வங்கி ஜூன் மாதத்தில் இருந்து இந்த சேவையை வழங்கும் என சொல்லப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், DBS, OCBC மற்றும் UOB வங்கிகள் இந்த மனி லாக் (Money lock) அம்சத்தை அறிமுகம் செய்தன.

மோசடி கும்பல் உங்கள் வங்கி கணக்கில் பணத்தை எடுப்பதில் இருந்து இந்த வசதி பாதுகாப்பு அளிக்கும்.

அதாவது வங்கி கணக்கில் இருக்கும் பணத்தின் நீங்கள் விரும்பிய தொகையை லாக் செய்து கட்டுப்படுத்தி வைத்துக்கொள்ள இந்த அம்சம் உதவும்.

அவ்வாறு லாக் செய்த தொகையை வேறு வங்கி கணக்கிற்கோ அல்லது வணிக பரிவர்த்தனைக்கோ கணக்கின் உரிமையாளர் (Account holder) பயன்படுத்த முடியாது.

லாக் செய்த அந்த தொகை மீண்டும் பயன்படுத்த அவர்கள் நேரடியாக வங்கிக்கு அல்லது ATM க்கு தான் செல்ல வேண்டும்.

அங்கு சென்று அடையாளங்களை உறுதி செய்து பின்னரே பணத்தை எடுக்க முடியும்.

ஒர்க் பெர்மிட், S Pass அனுமதி உடைய வெளிநாட்டு ஊழியர்களுக்காக வரவுள்ள மாற்றங்கள்

சிறுமியிடம் சில்மிஷ சேட்டை.. உறுப்புகளை புகைப்படம் எடுத்த வெளிநாட்டு ஊழியருக்கு சிறை, பிரம்படி