நிறுவனத்தில் 10 ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியருக்கு புத்தம் புதிய கார் – “வாக்குகளை நிறைவேற்றுவதில் முதலாளி சிறந்தவர்”

10 ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியருக்கு
TianSi/LinkedIn & Google Maps

10 ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியருக்கு வெகுமதியாக புத்தம் புதிய காரை நிறுவனம் ஒன்று பரிசாக அளித்து சிறப்பித்துள்ளது.

மலேசியாவின் ஜோகூர் பாருவில் உள்ள நகைக்கடையில் அவர் 10 ஆண்டுகள் பணிபுரிந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுமியிடம் சில்மிஷ சேட்டை.. உறுப்புகளை புகைப்படம் எடுத்த வெளிநாட்டு ஊழியருக்கு சிறை, பிரம்படி

TianSi ஜூவல்லரி என்ற நிறுவனம் அவருக்கு புரோட்டான் X50 காரை பரிசாக கொடுத்து அழகு பார்த்துள்ளது.

புரோட்டான் X50 மாடல் கார்களின் ஆரம்ப விலையே S$24,530 வெள்ளி இருக்கும் என்பது கூடுதல் தகவல்.

இந்நிலையில், பரிசை பெற்ற Xiaohongshu என்ற அந்த பெண் ஊழியர் தனது மகிழ்ச்சியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டார்.

தனது முதலாளிக்கு நன்றியையும் அவர் தெரிவித்து கொண்டார்.

அந்த பதிவில், தாம் ஒரு நல்ல நிறுவனத்தில் பணிபுரிந்ததற்கு மிகவும் நன்றி கடன் பட்டுள்ளதாக பகிர்ந்துள்ளார்.

ஏனெனில், பல ஆண்டுகளாக அவரின் முதலாளி ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்கள் முடிவு – MOM அப்டேட்