விமானத்தில் பயணி விட்டுச்சென்ற மடிக்கணினி.. 2 நாட்களுக்கு பிறகும் பத்திரமாக ஒப்படைத்த சாங்கி விமான நிலையம்!

Man who left laptop on NZ-S'pore flight said he knows SIA & Changi Airport would take care of it
Siew Tuck Wah/Facebook and Changi Airport's Now Boarding

சிங்கப்பூரில் தாம் விட்டுச்சென்ற மடிக்கணினியை பத்திரமாக வைத்திருந்ததற்காக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) மற்றும் சாங்கி விமான நிலையத்திற்கு ஆடவர் ஒருவர் நன்றியை தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தில் இருந்து சிங்கப்பூர் செல்லும் SIA விமானத்தில் அந்த மடிக்கணினியை ஏதோ ஒரு குழப்பத்தில் அவர் விட்டுச் சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.

கார்-லாரி கடும் விபத்து: மூன்று பேர் சம்பவ இடத்திலேயே மரணம்

இருந்தபோதிலும், விமான நிறுவனம் மற்றும் சாங்கி விமான நிலையத்தின் மீது தனக்கு நம்பிக்கை இருந்ததால் அது குறித்து தாம் கவலைகொள்ளவில்லை என்று அவர் கூறினார்.

சாங்கி விமான நிலையம் வீட்டை விட பாதுகாப்பானது என்றும், மேலும் அது செயல்திறன் மற்றும் நம்பிக்கையின் ஒரு அடையாளம் என்றும் அவர் பெருமிதம் கொண்டார்.

SIA மற்றும் சாங்கி விமான நிலையத்தின் மீது ஆடவர் வைத்திருந்த நம்பிக்கை வீண்போகவில்லை, ஏனெனில் அவர் இரண்டு நாட்களுக்குப் பிறகு தனது மடிக்கணினியை பெற்றுக்கொண்டார்.

எப்போதுமே எங்களின் நண்பராக இருப்பதற்கு இரு நிறுவனங்களுக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொண்டார்.

Siew Tuck Wah என்ற நபர் கடந்த ஆகஸ்ட் 27, அன்று வெளியிட்ட பேஸ்புக் பதிவில் இது குறித்து கூறியுள்ளார்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

நீரில் கண்டெடுக்கப்பட்ட மேலும் ஒரு ஆடவர் உடல் – போலீஸ் விசாரணை