சாங்கி விமான நிலையத்தின் முனையம் இரண்டு… 90மி வரை பயணிகள் வந்து செல்லலாம் – மாஸ் காட்டும் சிங்கப்பூர்!

Changi Airport/Facebook

Singapore Changi Airport: சாங்கி விமான நிலையத்தின் முனையம் 2 இன் வடக்கு பகுதி வரும் அக்டோபரில் மீண்டும் செயல்பட தொடங்கும் என சொல்லப்பட்டுள்ளது.

கடந்த மூன்று வருடங்களாக நடந்து வரும் இந்த பணி, திட்டமிடப்பட்டதற்கு சில மாதங்களுக்கு முன்னதாகவே முடிவு பெற்று மீண்டு தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிங்கப்பூரின் மிகவும் அரிதான நிகழ்வு… கட்டுமான தளத்தை சிதறடித்த “landspout” என்னும் சூறாவளி – Viral Video

இதனால் சாங்கி விமான நிலையத்தின் மொத்த பயணிகளின் திறன் ஆண்டுக்கு 85 மில்லியனில் இருந்து 90 மில்லியனாக அதிகரிக்கும்.

தற்போது ஆண்டுக்கு சுமார் 70 மில்லியன் பயணிகள் வந்து செல்வதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

முனையத்தின் தெற்கு பகுதி கடந்த ஆண்டின் அக்டோபர் மாதம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

கடனை வாங்கிக்கொண்டு சொந்த நாட்டுக்கு ஓட்டம்… Work Permit, புகைப்படத்தை அனுப்பி மிரட்டும் கடனாளிகள் – உயிரிழந்த முதலாளி.. தொடரும் சோகம்