சாங்கி விமான நிலையத்தின் முதலாவது, மூன்றாவது முனையங்கள் செப்.1- ல் மீண்டும் திறப்பு!

Changi Airport stole Woman arrested
Pic: TODAY

சிங்கப்பூரில் கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில், படிப்படியான தளர்வுகளை சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து வருகிறது. அந்த வகையில் சர்வதேச விமான போக்குவரத்தும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கொரோனா நோய்த்தொற்று குறைவாக உள்ள நாடுகளுடனான விமான போக்குவரத்துக்கு மட்டும் தற்போதைய நிலையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் வரும் பயணிகளில் முழுமையாக கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட பயணிகளுக்கு தனிமைப்படுத்திக் கொள்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர்கள், பல முறை கொரோனா பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவர் உள்ளிட்டப் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் மக்கள் தொகையில் முழுமையாக கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டவர்கள் 79% பேர்!

இதையடுத்து, சாங்கி விமான நிலையத்தில் வழக்கம் போல் சர்வதேச விமான போக்குவரத்து தொடங்க உள்ள நிலையில், அதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த நிலையில், சாங்கி விமான நிலையத்தின் முதலாவது முனையம் மற்றும் மூன்றாவது முனையம் வரும் செப்டம்பர் மாதம் 1- ஆம் தேதியிலிருந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மீண்டும் திறந்துவிடப்படவுள்ளது என்று சாங்கி விமான நிலையக் குழுமமும், சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

அந்த அறிவிப்பில், “விமான நிலையத்திற்குச் செல்லும் பயணிகள், விமான நிலைய ஊழியர்கள், பொதுமக்கள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் முனையங்கள் திறக்கப்படுகிறது. விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்தின் அருகே விமான நிலைய ஊழியர்கள் உணவு உட்கொள்வதற்குப் புதிய இடம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பயணியையும் வரவேற்க ஒருவர் மட்டுமே விமான நிலையத்திற்கு வர அனுமதிக்கப்படுவர். பயணிகளின் வசதிக்காக டாக்சி வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பு தாக்குதல்: சிங்கப்பூர் கடும் கண்டனம்!

அரசின் நடவடிக்கையால், பொருளாதார ரீதியிலாக கடுமையான பாதிப்பைச் சந்தித்த விமான நிறுவனங்கள், மீண்டும் புத்துயிர் பெறும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அத்துடன், சிங்கப்பூருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

கொரோனா பரவல் காரணமாக, சாங்கி விமான நிலையத்தின் முதலாவது மற்றும் மூன்றாவது முனையங்கள் கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.