ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பு தாக்குதல்: சிங்கப்பூர் கடும் கண்டனம்!

Singapore condemns kabul attack
Pic: AFP

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இதில் அமெரிக்க படையினர் 13 பேர் உட்பட 85க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ISIS அமைப்பினர் பொறுப்பேற்றுள்ள நிலையில், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

விபச்சாரம் தொடர்பான குற்றங்களுக்காக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆடவருக்கு 16 மாத சிறை

அந்த வகையில், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத்
தெரிவித்துள்ளதுடன், காயமடைந்தோர் விரைவில் குணமடைய விரும்புவதாகவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், ஆப்கானிஸ் நாட்டிலிருந்து வெளியேற முயலும் மக்களை பாதுகாப்பாகவும், முறையாகவும் வெளியேறுவதை உறுதிசெய்யும்படி, தலிபான்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் சிங்கப்பூர் கேட்டுக்கொண்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் மீட்பு பணி: களமிறங்கிய சிங்கப்பூர் விமானப் படை விமானம்!