விபச்சாரம் தொடர்பான குற்றங்களுக்காக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆடவருக்கு 16 மாத சிறை

Photo: Getty

விபச்சாரம் தொடர்பான குற்றங்களுக்காக இரண்டு பேருக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதில் 46 வயதான அருமைக்கண்ணு சசிகுமார் மற்றும் 60 வயதான ராஜேந்திரன் நாகரெத்தினம் ஆகிய இருவருக்கும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எதிர்பாராத விதமாக தொழிற்துறை இயந்திரத்தில் சிக்கிய ஊழியரின் கை – போராடி மீட்ட SCDF

அவர்களின் கோலிவுட் கிளப்பில், விபச்சாரம் தொடர்பான குற்றங்களில் பெண்களை ஈடுபட செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.

ராஜேந்திரன் மேல்முறையீடு செய்ததை அடுத்து, ஒரு குற்றச்சாட்டிலிருந்து அவரை விடுவித்து, மற்ற இரண்டு குற்றச்சாட்டுகளில் அவரது தண்டனையை குறைத்தது நீதிமன்றம்.

அவருக்கு முதலில் 30 மாத சிறை மற்றும் 3,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது, பின்னர் அது 19 மாத சிறை மற்றும் 2,500 வெள்ளி அபராதமாக குறைக்கப்பட்டது.

மேலும், சிங்கப்பூர் நிரந்தரவாசியான தமிழக வம்சாவளி அருமைக்கண்ணுக்கு 16 மாத சிறை தண்டனையும் 11,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது. இவரின் மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டது.

இவர்கள் தங்களின் கோலிவுட் கிளப்பில், பங்­ளா­தே­ஷைச் சேர்ந்த இரு நடன பெண்களை வாடிக்கையாளர்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

அதில் ஒரு பெண் இருவருடன் பாலியல் உறவு வைத்துள்ளார். ஒருவர் அதனை மறுக்க, ராஜேந்திரன் அந்த பெண்ணை அடித்து துன்புறுத்தியுள்ளார்.

இதுபோன்ற பாலியல் துன்புறுத்தல் காரணமாக அவர்களுக்கு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கட்டுமான இயந்திரத்தை திருடி, விற்க முயன்று பின்னர் வெளிநாட்டுக்கு ஓடிய ஆடவருக்கு சிறை