கட்டுமான இயந்திரத்தை திருடி, விற்க முயன்று பின்னர் வெளிநாட்டுக்கு ஓடிய ஆடவருக்கு சிறை

Abdul Zreika/Unsplash

ஜூரோங் தொழிற்பேட்டையில் இருந்து கனரக கட்டுமான இயந்திரத்தை திருடி அதை விற்க முயன்ற ஆடவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

44 வயதான நந்தகுமரன் லோகநாதன் என்ற அந்த ஆடவர், மலேசியாவுக்கு தப்பிச் சென்று இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார்.

பெண் ஊழியரை தொடர்ந்து பின்தொடர்ந்த பாதுகாப்பு இடைவெளி தூதுவர் – போலீசில் புகார்

சிங்கப்பூரரான அவர், திருட்டு குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதை அடுத்து, இன்று (ஆகஸ்ட் 26) இரண்டரை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.

சுமார் S$31,000 மதிப்புள்ள கனரக கட்டுமான இயந்திரத்தை அவர் எப்படி திருடினார் என்பதை நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடவில்லை.

கட்டுமான நிறுவனமான ராம் பிரதர்ஸ் கன்ஸ்ட்ரக்சன் & டிரேடிங் அதை வாடகைக்கு எடுத்து, கடைசியாக மார்ச் 28, 2018 அன்று 14 ஜலான் துகாங்கிற்கு வெளியே உள்ள பாதையில் நிறுத்தி வைத்ததாக கூறப்படுகிறது.

நந்தகுமரன் புறப்படுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காலை 11.30 மணியளவில் இயந்திரத்தை வளாகத்திற்குள் கொண்டு வந்ததைக் கண்காணிப்பு கேமரா காட்சிகள் காட்டியது.

இயந்திரத்தை விற்க, முன்னர் நந்தகுமரன் மூன்றாம் தரப்பு கனரக வாகன பழுதுபார்க்கும் ஒருவரை அணுகியதும் தெரியவந்துள்ளது.

பின்னர், S$5,000 முதல் S$6,000 வரை இயந்திரம் விற்கப்பட இருந்தது, ஆனால் நந்தகுமாரன் பணம் பெறுவதற்கு முன்பு, ராம் பிரதர்ஸ் இயந்திரத்தை கடந்த மார்ச் 30, 2018 அன்று மீட்டனர்.

அதனை அடுத்து, அன்றைய தினமே நந்தகுமாரன் மலேசியாவுக்குச் சென்றார்.

பின்னர், அவர் கடந்த ஆண்டு ஏப்ரல் 17 அன்று உட்லேண்ட்ஸ் சோதனைச் சாவடியில் கைது செய்யப்பட்டார்.

Air Travel Pass மூலம் இந்த இரு நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வர அனுமதி.!