பெண் ஊழியரை தொடர்ந்து பின்தொடர்ந்த பாதுகாப்பு இடைவெளி தூதுவர் – போலீசில் புகார்

Safe distancing ambassador allegedly stalked
Photo Via Fb

தெம்பனீஸில் உள்ள மால் ஒன்றில் வேலை செய்யும் 20 வயது பெண்ணை பின்தொடர்ந்ததாக சந்தேகத்தின்பேரில் பாதுகாப்பு இடைவெளி தூதுவர் மீது காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தூதுவர் முதன்முதலில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தெம்பனீஸ் 1ல் உள்ள உணவகத்தில் பணிபுரியும் பெண்ணை சந்தித்தார் என்று தி நியூ பேப்பர் தெரிவித்துள்ளது.

கோவிட்-19 தாெற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு – இந்த மாதத்தின் 15வது இறப்பு இது

ஆரம்ப சந்திப்பின்போது, பாதுகாப்பு இடைவெளி வழிகாட்டுதல்கள் குறித்து அவர் அந்தப் பெண்ணின் சார்பாக ஒரு வாடிக்கையாளரிடம் பேசினார்.

அதைத் தொடர்ந்து, அந்தப் பெண் அழகாக இருப்பதாக கூறிய அவர், பெண்ணின் விடுமுறை நாட்களைப் பற்றியும் கேட்டுள்ளார்.

பின்னர் அவர் பெண்ணின் தொடர்பு எண்ணையும், இன்ஸ்டாகிராம் கணக்கு உள்ளதா என்றும் கேட்டுள்ளார்.

அதோடாது மட்டுமல்லாமல், அந்தப் பெண்ணின் புகைப்படத்தை எடுத்து அவர் பெண்ணுக்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. அதை கண்ட பெண், இனி என்னுடைய புகைப்படங்களை எடுக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

எதையும் காதில் வாங்காத தூதுவர், தொடர்ந்து பெண்ணை பின்தொடர்ந்ததால் காவல்துறையிடம் அவர் புகார் செய்தார்.

இது குறித்து விசாரணை நடந்து வருவதாக, நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் மேலும் 24 பேருக்கு பாதிப்பு