எதிர்பாராத விதமாக தொழிற்துறை இயந்திரத்தில் சிக்கிய ஊழியரின் கை – போராடி மீட்ட SCDF

Photo: Shin Min Daily News Facebook

கடை உதவியாளர் ஒருவரின் கை, எதிர்பாராத விதமாக இறைச்சி ஊறவைக்கும் இயந்திரத்தில் சிக்கியது.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் ஆகஸ்ட் 24 அன்று நடந்ததாக ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.

கட்டுமான இயந்திரத்தை திருடி, விற்க முயன்று பின்னர் வெளிநாட்டுக்கு ஓடிய ஆடவருக்கு சிறை

பிளாக் 161 புக்கிட் மெரா சென்ட்ரலில் உள்ள ஹோ கீ பாக் சாங்கின் முக்கிய கடையில் இந்த சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

உடனடியாக சிங்கப்பூர் குடிமை பாதுகாப்புப் படையை (SCDF) உதவிக்கு அழைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

ஷின் மின் செய்தியின்படி, இதில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 70 வயது, அவர் ஐந்து வருடமாக அங்கு பணியாற்றிவருகிறார்.

Photo: Shin Min Daily News Facebook

முதல் தளத்தில் உள்ள தொழிற்சாலையில், பெண்ணின் வலது கை அந்த இயந்திரத்தில் சிக்கியிருப்பதை SCDF கண்டது.

பின்னர், 1 மணி நேரத்திற்குள் பெண்ணின் கை பாதுகாப்பாக அதிலிருந்து விடுவிக்கப்பட்டது.

அதை அடுத்து, அந்தப் பெண் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது  சுயநினைவுடன் இருந்தார் என்றும் SCDF கூறியுள்ளது.

இந்த சம்பவத்தில் ஊழியருக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பெண் ஊழியரை தொடர்ந்து பின்தொடர்ந்த பாதுகாப்பு இடைவெளி தூதுவர் – போலீசில் புகார்