சாங்கி கடற்கரையில் ஒன்றுகூடிய மக்கள்… கடல்வாழ் உயிரினங்களை தோண்டி எடுத்து வீட்டுக்கு கொண்டு சென்ற அறியாமை

changi-beach-dig
Just Keep Thinking

சீனப் புத்தாண்டு தின பொது விடுமுறை நாட்களை கொண்டாடும் வகையில் சிங்கப்பூரின் பல கடற்கரைகளில் ஏராளமான மக்கள் கூடி மகிழ்ந்தனர்.

சாங்கி கடற்கரையில் ஒன்றுகூடிய மக்கள் பல்வேறு கடல்வாழ் உயிரினங்களைத் தோண்டி எடுத்து மீண்டும் வீட்டுக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த ஊழியர்… வெளிநாட்டுக்குத் தப்பி, திருச்சி வந்தபோது கைது!

இது பற்றி “Just Keep Thinking” என்ற முகநூல் பக்கத்தில் குறிப்பிடப்பட்டது. இடுக்கிகள், மண்வெட்டிகள் மற்றும் வாளிகளுடன் அங்கிருந்த மக்கள் பலர் கடற்கரையில் வாழும் கடல் உயிரினங்களை தோண்டி எடுக்கும் காணொளி வெளியானது.

கடல் வாழ் உயிரினங்களை விடுவிக்க கோரி அங்கிருந்த குடும்பங்களுக்கு எடுத்துரைத்து, சமாதானப்படுத்தவும் முயற்சித்ததாக, அந்த அறிவியல் சேனலின் இணை நிறுவனர் MJ கூறினார்.

அவைகள், இயற்கையான சூழலுக்கு வெளியே உயிர்வாழ வாய்ப்பில்லை என்றும் அவர் அந்த குடும்பங்களுக்குச் சொல்ல முயன்றார்.

குழந்தைகளை காயப்படுத்தக்கூடிய ஸ்டிங் செல்கள் அல்லது கூர்மையான கூர்முனைகள் அந்த உயிரினங்களில் இருப்பதை சில குடும்பங்கள் அறிந்திருக்கவில்லை, என்றார்.

இயற்கையை பாத்துக்க வேண்டியது நம் பொறுப்பு, கடல்வாழ் உயிரினங்கள் கடற்கரை சூழலில் மட்டுமே வாழும் என்ற எண்ணம் பலருக்கு இல்லாததால் தான் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன.

சிங்கப்பூர் காட்டில் 33 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்த மர்ம மனிதர் – யார் அவர்?