சிங்கப்பூர் காட்டில் 33 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்த மர்ம மனிதர் – யார் அவர்?

man-live-singapore-forest-33-years

79 வயதான முதியவர் ஒருவர் சிங்கப்பூரில் உள்ள சுங்கே தெங்கா காட்டில் 33 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்துள்ளார். இது சமீபத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு டிச. 25, அன்று சோவா சூ காங்கில் உள்ள டெக் வை லேனில் சட்டவிரோதமாக காய்கறிகளை விற்கும்போது அவர் பிடிபட்டார், அப்போது தான் அவர் வீடு இல்லாமல் இவ்வளவு காலம் வாழ்ந்தது அதிகாரிகளால் கண்டறியப்பட்டது.

பல மாதங்களாக பின்தொடர்ந்து… லிப்டில் வைத்து பெண்ணிடம் தவறாக நடந்த ஆடவருக்கு சிறை

அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட காய்கறிகள், அவர் சொந்தமாக பயிரிட்டு வளர்த்ததாக கூறப்படுகிறது.

பல ஆண்டுகளாக காடுகளில் வசிக்கும் ஒரு மனிதனைப் பற்றிய பரபரப்பான கதை முதலில் ஜனவரி 17 அன்று ஷின் மின் டெய்லி நியூஸ் மூலம் வெளியிடப்பட்டது.

ஓ கோ செங் என்ற அவர் தீவின் வடமேற்கு பகுதியில் உள்ள காட்டில் வசித்து வந்துள்ளார், ஆனால் அவர் வசித்த சரியான இடம் பற்றி வெளியிடப்படவில்லை.

காட்டில் வசிப்பதால், மிளகாய் பாடி, பாண்டன் இலை போன்ற காய்கறிகளை சொந்தமாக அவரே பயிரிட்டுள்ளார்.

மேலும், அவர் வெளிப்பகுதியில் திறந்த நெருப்பில் சமைப்பார் என்றும், பெரும்பாலும் பிரெஷ் காய்கறிகளுடன் அரிசி கஞ்சி சாப்பிடுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் அவர் அணிந்திருந்த ஆடைகள் மற்ற நபர்களால் அவருக்கு வழங்கப்பட்டது எனவும் கூறப்படுகிறது.

அவர் காட்டில் பாம்புகளைப் பார்த்ததில்லை என்றும், கொசுக்கள் தான் தனது நண்பன் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், தனக்கு 50 வயதில் மனைவி இருப்பதாகவும், மருத்துவம் படிக்கும் 19 வயதில் ஒரு மகள் இருப்பதாகவும், அவர்கள் இருவரும் இந்தோனேசியாவின் பத்தாமில் வசிப்பதாகவும் கூறினார்.

ஒரு தொழிலாளியாக வேலை செய்து சேமித்த பணத்தை, அவர்களுக்கு மாதந்தோறும் S$500 அனுப்புவதாகவும் அவர் கூறினார்.

தேடப்பட்டு வந்த ஊழியர்… சென்னை விமான நிலையத்தில் வைத்து தூக்கிய போலீஸ்!