காலணிகளில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்த பயணி! (வைரலாகும் வீடியோ)

காலணிகளில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்த பயணி! (வைரலாகும் வீடியோ)
Photo: Trichy Customs

 

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் வெளிநாடுகளில் இருந்து தங்கம், போதைப்பொருள்களைக் கடத்தி வருவது நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில், திருச்சி மண்டல வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் விமான நிலையத்தைச் சுற்றிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிங்கப்பூரில் வெளியானது iPhone 15 மாடல்: முன்பதிவு, கடைகளில் எப்போது கிடைக்கும், விலை என்ன? – முழுத் தொகுப்பு

அந்த வகையில், கடந்த செப்டம்பர் 10- ஆம் தேதி அன்று சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த பயணி ஒருவரை தனியாக அழைத்துச் சென்ற அதிகாரிகள், அவர் அணிந்திருந்த காலணியைக் கழற்றச் சொல்லி, வாங்கி பார்த்தனர். இரு காலணிக்கு அடியிலும் தங்கத்தை மறைத்து வைத்துக் கடத்தி வந்ததைக் கண்டறிந்து, அவற்றை முழுவதுமாகப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் எடை 209 கிராம் என்றும், அதன் இந்திய மதிப்பு ரூபாய் 12.50 லட்சம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீண்ட நேர விசாரணைக்கு பிறகு அந்த பயணி திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அத்துடன், காலணியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கத்தை எடுக்கும் வீடியோவை திருச்சி மண்டல சுங்கத்துறை அதிகாரப்பூர்வ சமூக வலைதளப்பக்கங்களில் வெளியீட்டுள்ளது.

சிங்கப்பூர் முழுவதும் பொது எச்சரிக்கை ஒலி – பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்

அந்த வீடியோ தற்போது ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.