சிங்கப்பூரில் இருந்து சென்னை சென்ற சிங்கப்பூரர்… ஏர்போர்ட்டில் கொடுமை செய்த போலீஸ் – பயத்துடன் வெளியிட்ட வீடியோ

chennai airport police atrocity

சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு சிங்கப்பூரர் ஒருவர் தன்னுடைய விடுமுறையை கொண்டாட சென்றுள்ளார். அதுவும் இது தான் அவரின் முதல் தமிழக பயணம்.

அவர் ஏன் சென்றோம் என்ற அளவிற்கு ஏர்போர்ட்டில் இருந்த போலீஸ் குழு அவரை தொந்தரவு செய்துள்ளது.

உணவு கேட்டரிங் தோழில் செய்யும் 29 வயதான அன்னில் ரவின், கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி தனது குடும்பத்துடன் சென்னை சென்றுள்ளார்.

லிட்டில் இந்தியாவில் தங்கம் அதிக விற்பனை… நகைப்பக்கம் திரும்பியுள்ள அதிக மோகம்

அவரின் தாயின் பாஸ்போர்ட்டை சாதாரண உடையில் இருந்த போலீஸ் ஒருவர் கடுமையாக பறித்துக்கொண்டு சென்றதால் விரக்தியடைந்த அவர், டூடி-பிரீ பொருள் வாங்க யாரோ பறித்து செல்வதாக எண்ணி பாஸ்போர்ட்டை போலீசிடம் இருந்து பறித்துள்ளார்.

இதனை அடுத்து, போலீஸ் என்று சொல்லக்கூடிய 5 பேர் கொண்ட குழு ஒன்றுகூடி அவரை மிரட்ட தொடங்கியுள்ளனர். இதனால் அவர் பயந்து நடுங்கியுள்ளார்.

“உன்னை அடித்து ஜெயிலில் போட்டுவிடுவோம்” எனவும் மிரட்டியுள்ளனர். அவருக்கு இது உண்மை போலீசா? என்ற சந்தேகமும் இருந்துள்ளது.

இருப்பினும், அவர்களிடம் கேட்டால் இதனால் பிரச்சனை அதிகமாகிவிடுமோ என்ற அச்சமும் அவருக்கு இருந்துள்ளது.

பக்கத்தில் இருந்த யாரு அவருக்காக உதவிக்கு வரவில்லை என்பதையும் அவர் கவலையுடன் கூறியுள்ளார்.

மேலும் பிரச்சனையை ஏற்படுத்த விரும்பாததால், இதுபற்றி அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை என்று அன்னில் தெரிவித்தார்.

இறுதியாக, அவரின் தாய் அந்த போலீஸ் குழுவிடம் மன்னிப்பு கேட்டு அவரை அழைத்துக்கொண்டு போனார் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட வேதனையான அனுபவத்தை டிக்டாக் மூலம் அவர் பகிர்ந்துள்ளார்.

MRT ரயிலில் பெண் பயணி செய்த காரியம் இணையத்தில் வைரல் – ஏன் இவ்வாறு செய்தார்? என நெட்டிசன்கள் கேள்வி