‘சென்னை, சிங்கப்பூர் இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை’- ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

Photo: Air India Express Official Twitter Page

சென்னை, சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் நேரடி விமான சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express). வாரத்தில் திங்கள்கிழமை மற்றும் வியாழன்கிழமை ஆகிய இரு தினங்களில் இவ்வழித்தடத்தில் விமான சேவையை வழங்கி வருகிறது.

சிங்கப்பூர் முழுவதும் வெப்பநிலை குறைந்தது – தீவின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த காற்றுடன் மழையும் பெய்துள்ளது !

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு IX688 என்ற விமானமும், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு IX687 என்ற விமானமும் இயக்கி வருகிறது. இந்த வழித்தட விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அக்டோபர் 16- ஆம் தேதி ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா!

குறிப்பாக, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களுக்கான விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விமான பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் விமான பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.