அக்டோபர் 16- ஆம் தேதி ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா!

Photo: Hindu Endowments Board Official Facebook Page

சிங்கப்பூரில் உள்ள பிரசித்திப் பெற்ற கோயில்களில் ஒன்று ஸ்ரீ மாரியம்மன் கோயில் (Sri Mariamman Temple). இக்கோயில், 244 சௌத் பிரிட்ஜ் சாலையில் (244 South Bridge Road) அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் தீமிதித் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். எனினும், கொரோனா காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டுப்பாடுகளுடன் தீமிதித் திருவிழா நடைபெற்றது.

பணியிடங்களில் மரணித்தவர்கள் அனுபவம் வாய்ந்த தொழிலாளர்கள் – சிங்கப்பூர் மனிதவள அமைச்சர் டான்

அந்த வகையில், இந்தாண்டுக்கான தீமிதித் திருவிழா குறித்த அறிவிப்பை இந்து அறக்கட்டளை வாரியமும், ஸ்ரீ மாரியம்மன் கோயில் நிர்வாகமும் இணைந்து வெளியிட்டுள்ளன. அதன்படி, வரும் அக்டோபர் 16- ஆம் தேதி அன்று ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா நடைபெறவுள்ளது. தீமிதித் திருவிழாவுக்கான கொடியேற்றம் வரும் ஆகஸ்ட் 1- ஆம் தேதி அன்று நடைபெறும். இந்த ஆண்டு தீமிதித் திருவிழா மூன்று மாதம் நடைபெறும்.

ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலுக்கும், ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்கும் இடையிலான பக்தர்களின் பாத ஊர்வலம் நடைபெறும். பக்தர்கள் பால்குடம் செலுத்துதல், அங்கப்பிரதக்ஷணம் போன்ற நேர்த்திக் கடன்களைச் செலுத்தலாம். விழாவில் கலந்துக் கொள்வோர் கட்டாயம் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். மேலும், முழுமையாக கொரோனா தடுப்பூசிப் போட்டுக்கொண்டிருக்க வேண்டும்.

சிங்கப்பூரை விட்டு வெளியேறிய வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ! – உள்ளூர்வாசிகள் பணியில் நியமனம்

எந்நேரமும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். தீமிதித் திருவிழாவில் கலந்துக் கொள்ள விரும்புவோர் https://heb.org.sg/ என்ற இந்து அறக்கட்டளை வாரியத்தின் இணையதளப் பக்கத்தில் கட்டாயம் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். இதற்கான முன்பதிவு வரும் செப்டம்பர் மாதம் 16- ஆம் தேதி அன்று தொடங்கும். அதேபோல், தீமிதித் திருவிழாவை நேரில் காண இயலாதோர், இந்து அறக்கட்டளை வாரியத்தின் இணையதளப் பக்கத்திலும், யூடியூப் பக்கத்திலும் நேரலையில் காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.