‘சென்னை, சிங்கப்பூர் இடையேயான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான சேவை’- பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

Photo: Singapore Airlines Official Facebook Page

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் (Singapore Airlines), சென்னை மற்றும் சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தொடர்ந்து ஒன்றுக்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கி வருகிறது. தற்போது கோடைக்கால விடுமுறை தொடங்கியுள்ளதால், இந்த வழித்தடத்தில் மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களுக்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நோன்பு பெருநாள் முன்னிட்டு உரிமம் இல்லாமல் இயங்கிய 24 கடைகளுக்கு செக்

குறிப்பாக, சென்னையில் இருந்து குடும்பத்துடன் சிங்கப்பூருக்கு செல்ல பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக, இந்த சென்னை, சிங்கப்பூர் இடையேயான வழித்தடத்திற்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

விமான பயண டிக்கெட் முன்பதிவு, பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் https://www.singaporeair.com/en_UK/in/home#/book/bookflight என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாசரஸ் தீவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த சிறு வீடுகள்….மே 1 முதல் பொதுமக்கள் முன்பதிவு செய்துக் கொள்ளலாம்!

இதனிடையே, சிங்கப்பூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.