‘சென்னை, சிங்கப்பூர் இடையேயான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான சேவை’- ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

Photo: Singapore Airlines Official Facebook Page

 

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் (Singapore Airlines), இந்தியாவின் சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் விமான சேவையை வழங்கி வருகிறது.

சிங்கப்பூரில் அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில் 130 பேர் கைது

குறிப்பாக, சென்னை மற்றும் சிங்கப்பூர் இடையே இருமார்க்கத்திலும், நேரடி மற்றும் தினசரி விமான சேவைகளை வழங்கி வருகிறது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம். விநாயகர் சதுர்த்தி, ஆயுதப்பூஜைகள், கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி உள்ளிட்ட அடுத்தடுத்து பண்டிகைகள் வரவிருப்பதால், இந்த வழித்தட விமான சேவைக்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சென்னை, சிங்கப்பூர் வழித்தடத்தில் ஆகஸ்ட் முதல் நவம்பர் மாதங்கள் வரையிலான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அசாமில் இருந்து சிங்கப்பூருக்கு பழங்கள் ஏற்றுமதி!

விமான பயண அட்டவணை மற்றும் விமான பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.singaporeair.com/en_UK/in/home#/book/bookflight என்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.