சிங்கப்பூரில் அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில் 130 பேர் கைது

two-teenagers-130-suspected-drugs-arrested
CNB

சிங்கப்பூரில் போதைப்பொருள் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் 130 பேரை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (CNB) கைது செய்துள்ளது.

தீவு முழுவதும் கடந்த ஆகஸ்ட் 14 முதல் 25 வரை நடந்த இரண்டு வார அதிரடி சோதனையின் போது அவர்கள் பிடிபட்டனர்.

“உறவில் திருப்தி இல்லை, பணத்தை திருப்பி கொடு” என பெண்ணை தாக்கிய ஊழியருக்கு சிறை

இந்த சோதனையின் போது கைது செய்யப்பட்டவர்களில் 15 வயது சிறுமியும், 17 வயது சிறுவனும் அடங்குவர்.

இதில் S$1,503.05 ரொக்க பணமும் கைப்பற்றப்பட்டதாக CNB குறிப்பிட்டுள்ளது.

அதே போல, பறிமுதல் செய்யப்பட்ட போதை மருந்துகளின் மதிப்பு சுமார் S$453,800 ஆகும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

கல்லாங், மரைன் பரேட், பாசிர் ரிஸ் மற்றும் உட்லண்ட்ஸ் உள்ளிட்ட சில பகுதிகள் இந்த சோதனை நடவடிக்கை நடந்தது.

விசாரணைகள் நடந்து வருகின்றன.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

ஓடி உதவும் வெளிநாட்டு ஊழியர்கள் – “உதவி செய்வது ரத்தத்தில் ஊறிப்போன ஒன்று” – பாராட்டும் சிங்கப்பூர் மக்கள்