‘சென்னை, சிங்கப்பூர் இடையேயான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான சேவை’- டிசம்பர் வரையிலான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

Photo: Singapore Airlines Official Facebook Page

சென்னை, சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தினசரி மற்றும் நேரடி விமான சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகிறது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் (Singapore Airlines Group). குறிப்பாக, இந்த வழித்தடத்தில் நாள்தோறும் இரண்டுக்கும் மேற்பட்ட விமான சேவைகளை விமான நிறுவனம் வழங்கி வருகிறது.

சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல லாலுவுக்கு அனுமதி!

தற்போது இந்தியாவில் பண்டிகை காலங்கள் தொடங்கியுள்ள நிலையில், இந்தியா, சிங்கப்பூர் இடையே பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் கூறுகின்றன. இதனால், சென்னை, சிங்கப்பூர் இடையேயான விமான சேவைக்கான அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களுக்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விமான பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் பயண அட்டவணை, பயண கட்டணம் உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.singaporeair.com/en_UK/in/home#/book/bookflight என்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோவா சூ காங்கில் கடும் விபத்து: 28 வயது ஆடவர் பலி – போதையில் வாகனம் ஓட்டிய 3 பேர் கைது

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு தொடர்ந்து விமான சேவையை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.