சென்னை புத்தகக் கண்காட்சியைப் பார்வையிட்ட சிங்கப்பூர் அமைச்சர்!

சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியைப் பார்வையிட்ட சிங்கப்பூர் அமைச்சர்!
Photo: Singapore in India Twitter Page

 

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் 47- வது சென்னை புத்தகக் கண்காட்சி (Chennai Book Fair 2024), கடந்த ஜனவரி 03- ஆம் தேதி தொடங்கி, வரும் ஜனவரி 21- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. சுமார் 600 அரங்குகளைக் கொண்ட புத்தகக் கண்காட்சியில் தமிழ்நாட்டில் உள்ள பதிப்பகங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளைச் சேர்ந்த புத்தகங்களும் இடம் பெற்றுள்ளனர்.

வெளிநாட்டு ஊழியர்களை குறைக்கும் திட்டம்.. மலேசியாவில் வேலை அனுமதியுடன் நிர்கதியாய் நிற்கும் ஊழியர்கள்

லட்சக்கணக்கான புத்தகங்கள் புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ‘அயலக தமிழர் தினம்- 2024’ விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வதற்காக, தமிழ்நாட்டிற்கு வந்திருந்த சிங்கப்பூர் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கா.சண்முகம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசினார்.

சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியைப் பார்வையிட்ட சிங்கப்பூர் அமைச்சர்!
Photo: Singapore in India Twitter Page

அதைத் தொடர்ந்து, ‘அயலகத் தமிழர் தினம்- 2024’ விழாவில் கலந்துக் கொண்ட சிங்கப்பூர் அமைச்சர் கா.சண்முகம், பின்னர், சென்னை புத்தகக் கண்காட்சிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். புத்தகக் கண்காட்சியில், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் கழகம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த 534, 535 ஆகிய இரண்டு அரங்குகளுக்கும் சென்ற சிங்கப்பூர் அமைச்சர், புத்தகங்களை எடுத்துப் படித்தார்.

அதைத் தொடர்ந்து, அரங்குகளில் இருந்த சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் கழகத்தின் (Singapore Tamil Writers Kazhagam) நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய, சிங்கப்பூர் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கா.சண்முகம், அவர்களுடன் குழுப் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார்.

‘ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் மார்கழி மாத விநாயகர் சதுர்த்தி விழா- 2024’- பக்தர்களுக்கு அழைப்பு!

ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் தமிழ்நாடு மட்டுமின்றி, வெளிநாட்டு வாழ் தமிழர்களும், வருகை தந்து தங்களுக்கு வேண்டிய புத்தகங்களை வாங்கிச் செல்வர். சென்னை புத்தகக் கண்காட்சியில் அனைத்து புத்தகங்களும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.