வெளிநாட்டு ஊழியர்களை குறைக்கும் திட்டம்.. மலேசியாவில் வேலை அனுமதியுடன் நிர்கதியாய் நிற்கும் ஊழியர்கள்

வெளிநாட்டு ஊழியர்களுக்காக புதிய பொழுதுபோக்கு
Photo: Benar

வெளிநாட்டு ஊழியர்களை நம்பியிருக்கும் போக்கை குறைக்க புதிய முயற்சிகளை மேற்கொள்வதாக மலேசியா உறுதியளித்தது.

அவ்வாறு இருக்கும் சூழலில், நாட்டில் மோசடி மற்றும் வேலையில்லாமல் இருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் குறித்து தொடர்ச்சியான புகார்களை அரசாங்கம் பெறுவதாக தொழிற்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சிங்கப்பூரில் S$10,000 முதல் S$20,000 வரை மாத சம்பளம் வாங்கும் ஊழியர்கள் – என்னங்க சொல்றிங்க

உள்நாட்டு மக்களுக்கு அதிக ஊதியம் தரும் வேலைகளை உருவாக்கி, மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கடந்த ஆண்டு டிசம்பரில், பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி கூறினார்.

மேலும், 2024ல் வெளிநாட்டு ஊழியர்களை சார்ந்திருக்கும் போக்கை குறைப்பதையே முன்னுரிமையாக கொண்டு அரசாங்கம் செயல்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறு இருக்கையில், ஜோகூரில் உள்ள கோட்டா டிங்கியில் வேலை வாங்கி தருவதாக உறுதியளித்து 171 பங்களாதேஷ் ஊழியர்களை நாட்டிற்குள் கொண்டுவந்து ஏமாற்றப்பட்ட செய்தி தீயாக பரவியது.

அவர்கள் அனைவரும் தற்போது வேலையில்லாமல் இருப்பதாகவும் வெளியான தகவல்கள், மலேசியாவுக்கு பெரும் தலைவலியை உண்டாக்கியுள்ளது.

வேலை விசாவை பயன்படுத்தி மலேசியாவில் வேலை வாங்கி தருவதாக உறுதியளித்து பின்னர் வெளிநாட்டு ஊழியர்கள் இங்கு கொண்டு வரப்படுவதாகவும், பின்னர் அவர்கள் மோசடி செய்யப்படுவதாகவும் சொல்லப்பட்டுள்ளது

இதனை அந்நாட்டின் புலம்பெயர்ந்தோர் உரிமைக் குழுவின் வடக்கு-தெற்கு நிர்வாக இயக்குநர் திரு அட்ரியன் பெரேரா கூறினார்.

புதிய வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்துவதை அரசாங்கம் முடக்கியுள்ள நிலையில், சில மனித உழைப்பு தேவை மிகுந்த வேலைகளான சுத்தம் செய்தல் மற்றும் தோட்ட பராமரிப்பு போன்றவைக்கு ஆள் பற்றாக்குறை தொடர்ந்து நிலவி வருகிறது.

அந்நாட்டின் தற்போதைய குறைந்தபட்ச மாத ஊதியம் RM1,500 (US$323) என்ற நிலையில் உள்ளது.

மலேசிய வேலைக்கு ஆள் எடுப்பதாக செய்திகள் வந்தால் நன்கு ஆராய்ந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஸ்கூட் விமானத்தில் பயணிகளிடம் திருடிய வெளிநாட்டு ஆடவருக்கு சிறை

சிங்கப்பூரில் S$10,000 முதல் S$20,000 வரை மாத சம்பளம் வாங்கும் ஊழியர்கள் – என்னங்க சொல்றிங்க