சிங்கப்பூரில் S$10,000 முதல் S$20,000 வரை மாத சம்பளம் வாங்கும் ஊழியர்கள் – என்னங்க சொல்றிங்க

singapore jobs with high salary
(Photo: Mot.gov.sg Website)

சிங்கப்பூரில் என்ன வேலை, எவ்வளவு சம்பளம் என்ற கேள்வியை பல ஊழியர்கள் கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.

சிலர் எவ்வளவு சம்பாதித்தாலும் “பத்தல” என்று கூறுவார்கள். சிலர் “எனக்கு சொன்ன சம்பளம் கிடைக்கல” என புலம்புவார்கள்.

ஸ்கூட் விமானத்தில் பயணிகளிடம் திருடிய வெளிநாட்டு ஆடவருக்கு சிறை

சிங்கப்பூரில் அதிகம் சம்பளம் வாங்கும் நபர்கள் யார் என்ற எண்ணம் நமக்குள் ஓடிக்கொண்டே இருக்கும்.

இதனை வெளிக்காட்டும் விதமாக ஹாங்காங்கை சேர்ந்த Youtube பிரபலம் ஒருவர், இங்குள்ள ஊழியர்கள் எவ்வளவு தான் மாத சம்பளம் பெறுகிறார்கள் என்பதை அறிய காணொளி ஒன்றை எடுத்து வெளியிட்டார்.

சிங்கப்பூரின் மத்திய வட்டார பகுதியில் சிலரிடம் அவர் பேட்டி எடுத்தார். அதில் மாத சம்பளமாக S$20,000 வரை வாங்குவதாக சிலர் கூறியதை அடுத்து வாயடைத்து போனார்.

டிஜிட்டல் தொழிற்நுட்ப துறையில் இயக்குநராக பணிபுரியும் ஒருவர் மாத சம்பளமாக S$10,000 முதல் S$20,000 வரை பெறுவதாக கூறினார். ஆனால் உண்மை சம்பளத்தை அவர் கூற மறுத்துவிட்டார்.

வட்டார மேனேஜர் பதவியில் இருந்து நுகர்வோர் துறைக்கு மாறிய பெண் ஒருவர் தனக்கு 18 ஆண்டுகள் அனுபவம் இருப்பதாக கூறினார். அவரின் சம்பளம் S$20,000 என சொன்னார்.

வாழ்க்கை தரம் அதிகரிப்பதாக கூறிய அவர், சிங்கப்பூரில் வாடகை செலவும் அதிகம் என சொன்னார்.

வெளிநாட்டை சேர்ந்த மற்றொரு ஆடவர், தாம் 16 ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணியாற்றுவதாக கூறினார்.

அவர் அமேசானில் பணிபுரிவதாகவும், அதிக சம்பளம் எடுக்க கடுமையான உழைப்பு மட்டும் போதாது சாமர்த்தியமான வேலையும் வேண்டும் என்றார்.

அவரின் சம்பளம் எவ்வளவு என்பதை அவர் சொல்லவில்லை. பெரும்பாலான சிங்கப்பூரர்கள் அதிகமான சம்பளம் பெறுவதை அந்த காணொளியில் காண முடிந்தது.

வெளிநாட்டு ஊழியர்களான உங்களிடம் இதே கேள்வியை கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்? கமண்ட் பண்ணுங்க.

லாரி ஓட்டுநருக்கு சிறை.. 8 ஆண்டுகள் வாகனம் ஓட்டத் தடை