லாரி ஓட்டுநருக்கு சிறை.. 8 ஆண்டுகள் வாகனம் ஓட்டத் தடை

lorry-accident-driver ban jailed
Google Maps

சிங்கப்பூரில் லாரி மற்றும் மோட்டார் சைக்கிள் இடையே ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், 59 வயதான லாரி ஓட்டுநருக்கு மூன்று வார சிறைத்தண்டனையும், 8 ஆண்டுகள் வாகனம் ஓட்டத் தடையும் நேற்று (ஜன.12) விதிக்கப்பட்டது.

இந்திய ஊழியர்களுக்கு அசத்தல் அறிவிப்பு… UPI- PayNow இணைப்பு – நடப்புக்கு வந்த எல்லை தாண்டிய பண பரிவர்த்தனை

லிம் சூ காங்கில் உள்ள கல்லறை அருகே 134 கிமீ முதல் 158 கிமீ வேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள் மீது அவர் ஓட்டிச் சென்ற லாரி மோதியதாக சொல்லப்பட்டுள்ளது. இதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் (21) இறந்தார்.

அதாவது, ஜாலான் பகார் திரும்பும் பகுதியில் லாரி ஒட்டுநர் வேகத்தை குறைத்து மெதுவாகச் சென்றார். ஆனால் லாரியை நிறுத்தவில்லை என சொல்லப்பட்டுள்ளது.

இதனால் தான் இந்த எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டகாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கழிவு மேலாண்மை நிறுவனத்தில் பணிபுரிந்த லாரி ஓட்டுநர் ஜுமேட் டாஃபிர், கவன குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதாக ஒரு குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

மேலும், அவரது லாரியில் வந்த பயணிகளை காயப்படுத்தியதற்காக மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 15, அன்று மாலை சுமார் 5:55 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

லாரியின் முன், பின் பகுதிகளில் ஆட்கள் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

சிறுமியை தொடர்ந்து நாசம் செய்து வந்த ஆடவர்: 24 பிரம்படி, 29 ஆண்டுக்கு மேல் சிறை