இந்திய ஊழியர்களுக்கு அசத்தல் அறிவிப்பு… UPI- PayNow இணைப்பு – நடப்புக்கு வந்த எல்லை தாண்டிய பண பரிவர்த்தனை

File Photo

சிங்கப்பூரில் உள்ள இந்தியர்கள் இனி தங்கள் வங்கிக் கணக்குகளில் இருந்து நேரடியாக பணத்தை செலுத்தலாம் என சொல்லப்பட்டுள்ளது.

எல்லை தாண்டிய பணம் பரிவர்த்தனையை எளிதாக்கும் நோக்கத்துடன், இந்தியாவும் சிங்கப்பூரும் கடந்த ஆண்டு டிஜிட்டல் கட்டண முறைகளான UPI மற்றும் PayNow ஆகியவற்றை ஒன்றாக இணைத்தன.

சிறுமியை தொடர்ந்து நாசம் செய்து வந்த ஆடவர்: 24 பிரம்படி, 29 ஆண்டுக்கு மேல் சிறை

இந்நிலையில், இந்த வசதி BHIM, PhonePe மற்றும் Paytm ஆகியவற்றில் நடப்புக்கு வந்துள்ளதாக இந்திய தேசிய பண பரிமாற்ற கழகம் (NPCI) தற்போது அறிவித்துள்ளது.

இதனால் உடனடியாகவும், பாதுகாப்பான முறையிலும் மேலும் குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவையை பெற முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனால் சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கும், இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணப்பரிவர்த்தனைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

UPI மற்றும் PayNow இடையேயான எல்லை தாண்டிய இணைப்பின் மூலமாக, சிங்கப்பூரில் இருக்கும் இந்திய மக்கள் பண பரிவர்தனைகளை உடனடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்த முடியும் என்று NPCI நேற்று (ஜனவரி 11) தெரிவித்துள்ளது.

ஆக்சிஸ் வங்கி, DBS வங்கி இந்தியா, ICICI வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா போன்ற வங்கிகள் அந்த செயலிகள் மூலம் இந்தச் சேவையை வழங்குவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் பேங்க் ஆப் பரோடா, பாங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, ஃபெடரல் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க், இண்டஸ்இண்ட் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, சவுத் இந்தியன் வங்கி மற்றும் யூகோ வங்கி ஆகியவை விரைவில் இந்த இணைப்பில் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

UPI- PayNow இணைப்பால் ஏற்படும் நன்மைகள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்!

இந்தியாவின் UPI- சிங்கப்பூரின் PayNow இணைப்பு முறையைத் தொடங்கி வைத்த இந்திய, சிங்கப்பூர் பிரதமர்கள்!

இந்தியாவில் இருந்து துணை காவல்துறை அதிகாரிகளை வேலைக்கு எடுக்க சிங்கப்பூர் திட்டம்

Verified by MonsterInsights