இந்தியாவில் இருந்து துணை காவல்துறை அதிகாரிகளை வேலைக்கு எடுக்க சிங்கப்பூர் திட்டம்

singapore-ranks-fifth-least-corrupt-country
Photo via Nigel Chua

இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் இருந்து துணை காவல்துறை அதிகாரிகளை பணியமர்த்த சிங்கப்பூர் பரிசீலித்து வருவதாக சட்ட, உள்துறை அமைச்சர் க.சண்முகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சமீபத்திய சில ஆண்டுகளாக தைவானில் இருந்து எடுக்கப்படும் அதிகாரிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது அதற்கான காரணமாக சொல்லப்பட்டுள்ளது.

சிறுமியை தொடர்ந்து நாசம் செய்து வந்த ஆடவர்: 24 பிரம்படி, 29 ஆண்டுக்கு மேல் சிறை

இதன் விளைவாக, துணை காவல்துறை அதிகாரிகளை சேர்க்கும் அதிகார வரம்புகளை விரிவுபடுத்துவது குறித்து உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

இதில் இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் மியான்மர் போன்ற ஆசிய நாடுகளும் அடங்கும்.

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் பாதுகாப்பு சேவைகளுக்கான தேவையை பூர்த்தி செய்ய, வெளிநாட்டு துணை காவல்துறை அதிகாரிகளை சேர்க்க வேண்டிய சூழல் உள்ளதாக அவர் சொன்னார்.

சுருங்கி வரும் உள்ளூர் பணியாளர்கள், உடல் தகுதி மற்றும் சிங்கப்பூரர்களுக்கு இருக்கும் வேலை வாய்ப்புகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, போதுமான துணை காவல்துறை அதிகாரிகளை தேடுவதில் சவால்களை எதிர்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜொகூர் பாரு-சிங்கப்பூர் இடையே விரைவு ரயில் பாதை: வெறும் 5 நிமிடத்தில் இருநாடுகளுக்கும் பயணிக்கலாம்