ஜொகூர் பாரு-சிங்கப்பூர் இடையே விரைவு ரயில் பாதை: வெறும் 5 நிமிடத்தில் இருநாடுகளுக்கும் பயணிக்கலாம்

jb-singapore-rts-link-going-well
Prime Minister Lee Hsien Loong Twitter & Google Maps

ஜொகூர் பாரு-சிங்கப்பூர் இடையேயான விரைவு ரயில் (RTS) சேவை 2026ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கான கட்டுமான பணிகள் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியதாக இரு நாடுகளின் போக்குவரத்து அமைச்சகங்களும் கூட்டறிக்கையில் அறிவித்தன.

சிங்கப்பூருக்கு குவியும் சுற்றுலா பயணிகள்.. ஊக்குவிக்கும் “30 நாள் விசா இல்லா” பயண ஏற்பாடு

அதாவது தற்போது வரை, ​​சிங்கப்பூர் தரப்பில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு சிவில் உள்கட்டமைப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளன. அதே போல மலேசியா தரப்பில் 65 சதவீத திட்டப்பணிகள் நிறைவடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் மற்றும் மலேசிய பாலத்தின் எல்லைகளை இணைக்கும் 17.1 மீட்டர் நீளமான கான்கிரீட் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த மைல்கல்லை நினைவுகூரும் வகையில் நடத்த நிகழ்வில், பிரதமர் லீ சியென் லூங் மற்றும் மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் ஆகியோர் இன்று (ஜனவரி 11) கலந்துகொண்டனர்.

இந்த 4 கிமீ ரயில் கட்டுமான பணிகள் நிறைவு பெற்றால், ஜோகூரில் உள்ள புக்கிட் சாகர் மற்றும் உட்லண்ட்ஸ் நார்த் இடையே ஒவ்வொரு பாதையிலும் ஒரு மணி நேரத்திற்கு 10,000 பேர் வரை பயணிக்க முடியும்.

சேவை தொடங்கிய பின், வெறும் 5 நிமிடத்தில் இருவழி பகுதியிலும் விரைவாக பயணிக்கலாம் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் வேலை செய்வோரின் மனைவிகள் தான் டார்கெட் – வலையில் சிக்கும் பெண்கள்