சிங்கப்பூருக்கு குவியும் சுற்றுலா பயணிகள்.. ஊக்குவிக்கும் “30 நாள் விசா இல்லா” பயண ஏற்பாடு

assuarance-package-bonus
Fiona Tan/Mothership

சிங்கப்பூருக்கு 2023ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் நவம்பருக்கு இடையில் சீனாவின் முக்கிய நகரங்களில் இருந்து சுமார் 1.23 மில்லியன் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இந்த எண்ணிக்கையானது 2019 ஆம் ஆண்டில் அதே காலகட்டத்தில் சீனாவின் முக்கிய நகரங்களில் இருந்து வருகை தந்தவர்களின் எண்ணிக்கையில் 37 சதவீதம் என சொல்லப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் வேலை செய்வோரின் மனைவிகள் தான் டார்கெட் – வலையில் சிக்கும் பெண்கள்

இந்த புள்ளிவிவரங்களை கடந்த ஜன.9 அன்று, நாடாளுமன்றக் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கன் கிம் யோங் வெளியிட்டார்.

2023 ஜனவரி மற்றும் ஜூன் மாதத்துக்கு இடையில் மட்டும், சீனாவின் முக்கிய இடங்களில் இருந்து வருகை தந்த சுற்றுலா பயணிகள் சிங்கப்பூரில் S$1.12 பில்லியன் செலவிட்டுள்ளனர்.

சீனாவுடனான சிங்கப்பூரின் 30 நாள் விசா இல்லா பயண ஏற்பாடு குறித்த அறிவிப்பும் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இருநாடுகளும் இடையே 30 நாள் விசா இல்லா பயண ஏற்பாடு, இந்த 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே நடைமுறைக்கு வரும் என முன்னர் அறிவிப்பு செய்யப்பட்டது.

உலகின் மிக பெரிய மக்கள் தொகையை கொண்ட நாடான சீனாவுக்கு பல நாடுகள் இலவச விசா நடைமுறையை அமல்படுத்தியுள்ளனர்.

அதேபோல, சீனாவுக்கு அடுத்து பெரிய நாடான இந்திய மக்களுக்கும் மலேசியா, இந்தோனேசியா, கென்யா, ஈரான் போன்ற நாடுகள் இலவச விசா நடைமுறையை அமல்படுத்தியுள்ளனர்.

இந்திய மக்களுக்கு விசா இல்லாத பயண ஏற்பாட்டை சிங்கப்பூர் அறிவிக்குமா என்ற எதிர்பார்ப்பு பலருக்கு இருந்து வருகிறது.

ஆனால், அதற்கான எந்தவித நகர்வுகளும் தற்போது வரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் விசா இல்லாமல் பயணிக்கும் புதிய உடன்பாடு – 2024இல் நடப்புக்கு வரும்

“பயிற்சி இல்லாத வேலையை பார்க்க சொன்னா என்ன பண்றது” – இரு ஊழியர்களின் மரணமும்.. நிறுவனத்தின் அஜாக்கிரதையும்..

Verified by MonsterInsights