சிங்கப்பூரின் விசா இல்லாமல் பயணிக்கும் புதிய உடன்பாடு – 2024இல் நடப்புக்கு வரும்

Singapore visa free travel arrangement
Pic: REUTERS/Edgar Su

சிங்கப்பூர் விசா இல்லாமல் பயணிக்கும் உடன்பாட்டை செய்யப்போவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

அதாவது சிங்கப்பூர் மற்றும் சீனா ஆகிய இருநாடுகளும் 30 நாள் விசா இல்லாமல் மேற்கொள்ளும் பயண ஏற்பாட்டுக்கு உடன்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 80% வரை மாபெரும் தள்ளுபடி விற்பனை: டிச.8 – டிச.10 வரை – முந்துங்கள்

இது அடுத்த 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் செயல்படுத்தபடலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை பிரதமர் அலுவலக அதிகாரி (PMO) இன்று (டிச.7) வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.

சீனாவின் தியான்ஜினில் இன்று டிச.7-ம் தேதி நடைபெற்ற இருதரப்பு ஒத்துழைப்புக்கான 19வது கூட்டு சந்திப்பில் இந்த பரிந்துரை வெளியானது.

அதாவது துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் இந்த புதிய விசா ஏற்பாட்டைத் தெரிவித்தார்.

சிங்கப்பூரும் சீனாவும் இரு நாட்டு மக்களிடையேயான தொடர்பை வலுப்படுத்தும் முயற்சிகளின் இதுவும் ஒன்றாக இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

இது எப்போது நடப்புக்கு வரும் மேலும் அதுபற்றிய கூடுதல் விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்தியர்களுக்கு விசா தேவையில்லை.. சிங்கப்பூரில் இருந்து மலேசியா செல்லும் இந்தியர்களுக்கு விசா தேவையா?

வெளிநாட்டு ஊழியர்களை ஏமாற்றிய பெண்.. தன் நண்பர்களையும் சேர்த்து விட்ட ஊழியர் – சிங்கப்பூரில் வேலைபார்த்த பெண்ணின் ட்ரிக்