இந்தியர்களுக்கு விசா தேவையில்லை.. சிங்கப்பூரில் இருந்து மலேசியா செல்லும் இந்தியர்களுக்கு விசா தேவையா?

Singapore 30-day visa-free entry China

மலேசியா செல்லும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

அதாவது வரும் டிசம்பர் 01ம் தேதி முதல் இது நடப்புக்கு வரும் என சொல்லப்பட்டுள்ளது

சிங்கப்பூரில் இந்தியருக்கு சிறை.. சாதாரண வாக்குவாதம் மரணத்தில் முடிந்த விபரீதம்

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தி வரும் மலேசியா அரசு, வரும் ஆண்டுகளில் விசாவில் பல்வேறு வசதிகளைக் கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் இருந்து முதலீட்டாளர்கள், சுற்றுலாப் பயணிகள் வருகையை ஊக்குவிக்கும் விதமாக வரும் டிச.01ம் தேதி முதல் மலேசியாவில் விசா இன்றி 30 நாட்கள் தங்கலாம் என கூறியுள்ளது.

இந்த திட்டம் 2024 நவம்பர் 30ம் தேதி வரை நடப்பில் இருக்கும் என்றும் மலேசியா அரசு அறிவித்துள்ளது.

சிங்கப்பூரில் இருக்கும் இந்தியர்களுக்கு இது பொருந்துமா?

சிங்கப்பூரில் இருக்கும் இந்தியர்களுக்கு இது பொருந்துமா என்ற கேள்வி நம் தளத்தின் inboxஇல் அதிக அளவில் கேட்கப்படுகிறது.

சில ட்ராவல் நிறுவனங்களிடம் இது குறித்து கேட்டபோது சிங்கப்பூர் வாழ் இந்தியர்களுக்கு இது வரை எந்த தகவலும் வரவில்லை என சொன்னது.

அதிகார தகவல் வரும் என எதிர்பார்ப்பதாக அவர்கள் கூறினர்.

அதே போல, சிங்கப்பூர் செய்தி தளமும் இது குறித்து விசாரித்ததாகவும், இந்த திட்டம் நடப்புக்கு வந்த பிறகு தான் சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள் விசா இல்லாமல் செல்லலாமா என்பது தெரியவரும் என கூறியுள்ளது.

இன்னும் இரு தினங்களில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்த்து காத்திருப்போம். இணைந்து இருங்கள் Tamil Micset Singapore தளத்துடன்…

இந்திய பணிப்பெண்ணுக்கு சொந்த ஊரில் வீடு கட்டிக்கொடுத்த சிங்கப்பூர் முதலாளி – “பணிப்பெண் கிடைத்தது எங்கள் பாக்கியம்” என புகழாரம்

மலேசியா அரசின் அதிரடி அறிவிப்பு…. மகிழ்ச்சியில் இந்தியர்கள்!