சிங்கப்பூரில் இந்தியருக்கு சிறை.. சாதாரண வாக்குவாதம் மரணத்தில் முடிந்த விபரீதம்

சிங்கப்பூரில் இந்தியருக்கு சிறை.. சாதாரண வாக்குவாதம் மரணத்தில் முடிந்த விபரீதம்
Photo: Freepil

சிங்கப்பூரில் இந்தியருக்கு சிறை: சாதாரண வாக்குவாதம் மரணத்தில் முடிந்ததால், இந்திய ஆடவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வாடகை வாகனத்தில் ஒன்றாக வந்த ஆடவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சக்திவேல் சிவசூரியன் என்பவர் ஆடவரை தாக்கி கீழே தள்ளிவிட்டார் என முன்னர் நாம் செய்தி வெளியிட்டோம்.

இந்திய பணிப்பெண்ணுக்கு சொந்த ஊரில் வீடு கட்டிக்கொடுத்த சிங்கப்பூர் முதலாளி – “பணிப்பெண் கிடைத்தது எங்கள் பாக்கியம்” என புகழாரம்

இதில் கீழே விழுந்த திரு மஞ்சுநாதா லூயிஸ் ரவி என்பவருக்கு கழுத்து மற்றும் தலையில் காயங்கள் ஏற்பட்டது.

ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற திரு மஞ்சுநாதா 5 நாள் கழித்து உயிரிழந்ததார்.

இந்நிலையில், மரணத்தை ஏற்படுத்திய 33 வயதான சக்திவேல் சிவசூரியன் என்ற இந்தியருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சக்திவேல், தானாக முன்வந்து காயத்தை ஏற்படுத்தியதாக கடந்த அக். மாதம் குற்றம் நிரூபணமானது.

இந்த வழக்கை பொறுத்தவரை திட்டமிட்டு ஏதும் நடக்கவில்லை என்றும், கீழே விழுந்தவருக்கு சக்திவேல் உதவி செய்ய முன்வந்ததும் அறியப்படுகிறது.

ஆனால், விசாரணை அதிகாரி மீது சக்திவேல் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததை சுட்டிக்காட்டி பேசிய நீதிபதி அவர் திருந்தியதாக எந்த அறிகுறியும் தெரியவில்லை என்றும் கூறினார்.

முழு விபரம்:

வாகனத்தில் தன்னுடன் வந்த ஆடவரை தாக்கிய நபர்.. கீழே விழுந்த அவர் மருத்துவமனையில் மரணம்

“மோதல் எச்சரிக்கை, ஓட்டுநர் சோர்வை கண்காணிக்கும் அமைப்பு” ஆகிய சிறப்புகளுடன் கூடிய மின்சார பேருந்துகள் அறிமுகம்