“மோதல் எச்சரிக்கை, ஓட்டுநர் சோர்வை கண்காணிக்கும் அமைப்பு” ஆகிய சிறப்புகளுடன் கூடிய மின்சார பேருந்துகள் அறிமுகம்

360-new-electric-buses-singapore
Photo: Joshua Lee from Mothership

சிங்கப்பூரின் நில போக்குவரத்து ஆணையம் (LTA) சமீபத்தில் 360 மின்சார பொதுப் பேருந்துகளை சுமார் S$166.4 மில்லியனுக்கு வாங்கியுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் மின்சார பேருந்து வாங்கப்பட்டது இதுவே முதன்முறை என சொல்லப்பட்டுள்ளது.

வெறும் 3 கிமீ உள்ள லிட்டில் இந்தியாவுக்கு செல்ல S$65 கட்டணமா? – இந்திய சுற்றுலா பயணிகள் விரக்தி

இதற்கு முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டில், முன்னோடித் திட்டம் நடப்பில் இருந்தபோது 60 மின்சார பேருந்துகள் சுமார் S$50 மில்லியனுக்கு வாங்கப்பட்டது.

புதிய பேருந்துகளுடன் சேர்த்து சிங்கப்பூரில் மின்சார பொதுப் பேருந்துகளின் எண்ணிக்கையை 420 ஆக உயர்ந்துள்ளது, இது தற்போதுள்ள ஒட்டுமொத்த பொதுப் பேருந்துகளின் எண்ணிக்கையில் ஏழு சதவீதம் ஆகும்.

அனைத்து புதிய மின்சார பேருந்துகளும் மூன்று கதவுகளுடன் ஒற்றை அடுக்குகளாக இருக்கும் என LTA கூறியுள்ளது.

சிறப்புகள்

ஒவ்வொரு புதிய பேருந்திலும் பயணிகளுக்கு அவர்களின் பயணம் பற்றிய ஒலி மற்றும் ஒளி தகவல்களை தெரிவிக்கும் திரை அமைப்பு இடம்பெறும்.

ஒருங்கிணைக்கப்பட்ட CCTV காட்சிகள் மூலம் மோதல் குறித்த எச்சரிக்கை அமைப்பும் அதில் இருக்கும்.

ஓட்டுநர் சோர்வு அடைந்தால் காட்டும் கண்காணிப்பு அமைப்பும் அதில் இடம்பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு.

அத்துடன் டயரில் இருக்கும் காற்றின் அழுத்த கண்காணிப்பு அமைப்பும் இடம்பெற்றுள்ளது.

2024 முதல் செயல்படும்

புதிய மின்சார பேருந்துகள் படிப்படியாக 2024 டிசம்பர் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என LTA கூறியுள்ளது.

அதே வேளையில், சட்டப்பூர்வ ஆயுட்காலம் முடிவடையும் டீசல் பேருந்துகள் சேவை இருக்காது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

DBS, OCBC மற்றும் UOB வங்கி வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் அறிவிப்பு – உங்கள் பணத்தை பாதுகாக்க உடனே இத செய்ங்க!