DBS, OCBC மற்றும் UOB வங்கி வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் அறிவிப்பு – உங்கள் பணத்தை பாதுகாக்க உடனே இத செய்ங்க!

dbs-ocbc-uob-money-lock-scam-protect
(Photo: Asiaone)

சிங்கப்பூரில் வங்கி கணக்கு உடைய நபர்களுக்கு உதவும் நோக்கில் பாதுகாப்பு அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

DBS, OCBC மற்றும் UOB வாங்கி வாடிக்கையாளர்கள் மோசடியில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள மனி லாக் (Money lock) அம்சம் அறிமுகமாகியுள்ளது.

“வெளிநாட்டு ஊழியர்களின் சிரிப்பு ஒன்றே எங்களுக்கு மகிழ்ச்சியை தரும்”.. எகிறும் செலவினங்கள் – ஊழியர்களுக்கு உதவி செய்த நல்லுள்ளங்கள்

மோசடி கும்பல் உங்கள் வங்கி கணக்கில் பணத்தை எடுப்பதில் இருந்து இந்த வசதி பாதுகாப்பு அளிக்கும்.

அதாவது வங்கி கணக்கில் இருக்கும் பணத்தின் நீங்கள் விரும்பிய தொகையை லாக் செய்து கட்டுப்படுத்தி வைத்துக்கொள்ள இந்த அம்சம் உதவும்.

அவ்வாறு லாக் செய்த தொகையை வேறு வங்கி கணக்கிற்கோ அல்லது வணிக பரிவர்த்தனைக்கோ கணக்கின் உரிமையாளர் பயன்படுத்த முடியாது.

லாக் செய்த அந்த தொகை மீண்டும் பயன்படுத்த அவர்கள் நேரடியாக வங்கிக்கு தான் செல்ல வேண்டும்.

அங்கு சென்று அடையாளங்களை உறுதி செய்து பின்னரே பணத்தை எடுக்க முடியும்.

பிளம்பிங், எலெக்ட்ரிக்கல் உள்ளிட்ட வேலைகளில் உள்ள 133,000 வெளிநாட்டு ஊழியர்கள்… நடுத்தர சம்பளம் S$2,700.. சராசரி சம்பளம் S$3,100