“வெளிநாட்டு ஊழியர்களின் சிரிப்பு ஒன்றே எங்களுக்கு மகிழ்ச்சியை தரும்”.. எகிறும் செலவினங்கள் – ஊழியர்களுக்கு உதவி செய்த நல்லுள்ளங்கள்

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் வாழ்க்கை செலவினங்கள் காரணமாக வெளிநாட்டு ஊழியர்கள் பெரிதும் தடுமாறி வருவதாக கூறப்பட்டுள்ளது.
SingLand

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் வாழ்க்கை செலவினங்கள் காரணமாக வெளிநாட்டு ஊழியர்கள் பெரிதும் தடுமாறி வருவதாக கூறப்பட்டுள்ளது.

அவர்களில் குறிப்பிட்ட சில ஊழியர்களுக்கு தங்களால் முடிந்த உதவியை சிங்லேண்ட் செய்தது.

சிங்கப்பூரில் COVID-19 தொற்று.. உயிரிழந்த 13 மாத குழந்தை

அதாவது சுமார் 40 வெளிநாட்டு ஊழியர்களுக்கு மளிகை பொருட்களை வாங்கிக்கொள்ள தலா S$70 மதிப்புள்ள பற்றுசீட்டும், மதிய உணவையும் சிங்லேண்ட் தொண்டூழியர்கள் ஏற்பாடு செய்தனர்.

இந்த நிகழ்ச்சி கடந்த புதன்கிழமை அன்று வெஸ்ட் மாலில் நடைபெற்றது. இந்த திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

2025 வரை செயல்படும் இந்த திட்டத்திற்கு ஆண்டுதோறும் சிங்லேண்ட் $50,000 வரை நிதி உதவி செய்வதாக சொல்லப்பட்டுள்ளது.

அதாவது வெளிநாட்டு ஊழியர்களுக்கு சேவைகளை வழங்கும் ஹெல்த்செர்வ் அறநிறுவனத்துக்கு அந்த நிதி வழங்கப்படும்.

இதனால் வெளிநாட்டு ஊழியர்களுக்கு கூடுதல் சேவைகள் சலுகை கட்டணத்திலும், இலவசமாகவும் கிடைக்கும்.

“எங்களுக்காக கட்டிடங்களை கட்டியெழுப்பும் வெளிநாட்டு ஊழியர்களின் மனநிலை பாதுகாப்புக்கு நாங்கள் அக்கறை செலுத்துகிறோம்” என்று சிங்லேண்ட் தலைமை நிர்வாகி ஜாநதன் யூ கூறினார்.

“இந்த சேவைகளினால் அவர்களின் முகத்தில் ஏற்படும் அந்த புன்முறுவல் எங்களுக்கு மகிழ்ச்சியை தரும்” என்றும் அவர் கூறினார்.

பிளம்பிங், எலெக்ட்ரிக்கல் உள்ளிட்ட வேலைகளில் உள்ள 133,000 வெளிநாட்டு ஊழியர்கள்… நடுத்தர சம்பளம் S$2,700.. சராசரி சம்பளம் S$3,100