சிங்கப்பூரில் COVID-19 தொற்று.. உயிரிழந்த 13 மாத குழந்தை

toddler-baby-boy-dies-covid-19-first-death-singapore 2023
Photo: Yahoo India

சிங்கப்பூரில் COVID-19 தொற்று காரணமாக 13 மாத குழந்தை இறந்ததாக சுகாதார அமைச்சகம் (MOH) கூறியுள்ளது.

இந்த ஆண்டு 12 வயதுக்குட்பட்டவர்களிடையே ஏற்பட்ட முதல் COVID-19 மரணம் இது என MOH குறிப்பிட்டுள்ளது.

பிளம்பிங், எலெக்ட்ரிக்கல் உள்ளிட்ட வேலைகளில் உள்ள 133,000 வெளிநாட்டு ஊழியர்கள்… நடுத்தர சம்பளம் S$2,700.. சராசரி சம்பளம் S$3,100

அந்த குழந்தை COVID-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றும் சுகாதார அமைச்சகம் (MOH) நேற்று (நவம்பர் 25) தகவலை வெளியிட்டது.

பிறப்பிலேயே அந்த குழந்தைக்கு கடுமையான மருத்துவ பிரச்சனைகள் இருந்ததாகவும் MOH சொன்னது.

அந்த குழந்தைக்கு கடந்த அக்.10 அன்று கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது, மேலும் அதே நாளில் குழந்தை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டதாக MOH கூறியது.

இதனை அடுத்து, கடந்த அக்.12 அன்று அந்த ஆண் குழந்தை இறந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

லிட்டில் இந்தியாவில் அதிரடி சோதனை: சிக்கிய மதுபான கடைகளும், ஊழியர்களும்..