வாகனத்தில் தன்னுடன் வந்த ஆடவரை தாக்கிய நபர்.. கீழே விழுந்த அவர் மருத்துவமனையில் மரணம்

வாடகை வாகனத்தில் ஒன்றாக வந்த ஆடவருடன் வாக்குவாதத்தில்

வாடகை வாகனத்தில் ஒன்றாக வந்த ஆடவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சக்திவேல் சிவசூரியன் என்பவர் ஆடவரை தாக்கியதாக சொல்லப்பட்டுள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட திரு மஞ்சுநாதா லூயிஸ் ரவிக்கு கழுத்து மற்றும் தலையில் காயங்கள் ஏற்பட்டது.

இந்திய ஊழியருக்கு சிறை, பிரம்படி.. இளம்பெண்ணை காட்டுக்குள் இழுத்துச்சென்று நாசம் செய்த ஊழியர்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் ஐந்து நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் 2020 ஜூலை மாதம் நடந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

33 வயதான சக்திவேல், தானாக முன்வந்து காயத்தை ஏற்படுத்தியதாக நேற்று நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணமானது.

தவறி விழுந்ததில் மஞ்சுநாதாவுக்கு ஏற்பட்ட ஆரம்பக் காயம் அவரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தவில்லை என்பதுதான் 16 நாள் விசாரணையின் மூலம் வெளிவந்த தகவல்.

மாறாக, சக்திவேல் அவரை வாகனத்தில் ஏற்றிச் சென்று இறக்கிவிட முயன்றபோதுதான் அந்த காயம் தீவீரமானதாகவும், அதனால் தான் அவர் மரணம் அடைந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சக்திவேலும் அவர்களுடன் பயணித்த இன்னொரு பெண்ணும் தரையில் விழுந்த மஞ்சுநாதாவை தூக்க முயன்றபோது அவர் இரண்டு முறை கீழே விழுந்தார் என சொல்லப்பட்டுள்ளது.

2020 ஜூலை 18 அன்று இரவு சுமார் 11 மணியளவில், கங்சா சாலையில் உள்ள HDB பிளாக்கிற்கு திரு மஞ்சுநாதா, பெண் ஒருவர், சக்திவேல் மற்றும் சக்திவேலின் மனைவி ஆகியோர் டாக்ஸியில் சென்று கொண்டிருந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன. அவர்களுக்குள் என்ன உறவு, என்ன பழக்கம் என்பது குறித்து கூறப்படவில்லை

அப்போது சக்திவேலுக்கும், மஞ்சுநாதாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, பின்னர் அவர்கள் வாகனத்தை விட்டு இறங்கிய பிறகு அது சண்டையாக மாறியது.

இந்த தகராறில் சக்திவேல் தாக்கியதாகவும், இதனால் திரு மஞ்சுநாதா கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் அடிபட்டது என்றும் அதன் பிறகு அவரால் எழுந்திருக்க முடியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

சம்பவத்தை நேரில் கண்டவர் 995 அவசர எண்ணை அழைத்தார், பின்னர் திரு மஞ்சுநாதா இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதனை அடுத்து அவரை சோதனை செய்ததில் மூளையின் இரத்தப்போக்கு இருப்பதும், மூளை வீக்கம் மற்றும் மூளை பாதிப்படையும் என்ற தகவலும் தெரியவந்தது.

அதன் பின்னர் 5 நாட்கள் கழித்து அவர் உயிரிழந்தார்.

அடுத்த மாதம் சக்திவேல் மீண்டும் நீதிமன்றத்திற்கு திரும்புவார் என சொல்லப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு இனி கப்பலில் வரலாம் – கட்டணம் எவ்ளோ?