இந்திய பணிப்பெண்ணுக்கு சொந்த ஊரில் வீடு கட்டிக்கொடுத்த சிங்கப்பூர் முதலாளி – “பணிப்பெண் கிடைத்தது எங்கள் பாக்கியம்” என புகழாரம்

Couple buy studio flat in India for domestic helper to show gratitude
Facebook

வீட்டுப்பணிப்பெண்ணுக்கு பாராட்டு மற்றும் நன்றிக்கடன் செலுத்தும் வகையில் திரு ஜோசப் ஹாரிசன் மற்றும் அவரது மனைவி லீன்ஸ் ஜோசப் தம்பதி இந்தியாவில் சொந்த வீடு வாங்கி கொடுத்துள்ளனர்.

ராணா மம்தா என்ற அந்த பணிப்பெண்ணின் சொந்த ஊரான இந்தியாவின் மேற்கு வங்கம், டார்ஜிலிங்கில் அந்த தம்பதி வீடு வாங்கி கொடுத்துள்ளனர்.

“மோதல் எச்சரிக்கை, ஓட்டுநர் சோர்வை கண்காணிக்கும் அமைப்பு” ஆகிய சிறப்புகளுடன் கூடிய மின்சார பேருந்துகள் அறிமுகம்

அந்த தம்பதிக்கு 14 மற்றும் எட்டு வயதில் இரண்டு குழந்தைகள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

2015 இல் வேலைக்கு சேர்ந்தார்

கடந்த 2015 ஆம் ஆண்டில் திருமதி மம்தாவை அவர்கள் வேலைக்கு அமர்த்தியுள்ளனர்.

அவர் வேலைக்கு சேர்ந்தபோது திரு ஹாரிசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் என்றும், மேலும் இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமாக இருந்தார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

அப்போது அவர்களின் குடும்பத்தில் பல பிரச்சனைகள் இருந்ததாகவும், மம்தா அவர்கள் வீட்டிற்கு வந்து, அவருடன் பேசி, சேர்ந்து பிரார்த்தனை செய்ததாகவும் திருமதி ஜோசப் கூறினார்.

மம்தாவை கிடைத்தது நாங்கள் செய்த பாக்கியம்

43 வயதான திருமதி மம்தா எங்கள் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய விஷயங்களில் ஒன்றாகும் என அவர் மகிழ்வுடன் கூறியுள்ளார்.

தற்போது ஒவ்வொரு வாரமும் திருமதி மம்தாவுடன் சேர்ந்து அவரது குடும்பம் தேவாலயத்திற்கு செல்வதாகவும் கூறப்பட்டுள்ளது.

“மம்தா கிடைத்தது நாங்கள் செய்த பாக்கியம். அவர் எங்கள் வீட்டின் மேலாளர்,” என்றார் அரசு ஊழியரான திரு ஹாரிசன்.

பெற்றோர் & உடன்பிறப்புகள் இல்லை

டார்ஜிலிங்கில், திருமதி மம்தா தனது நண்பர்கள் அல்லது தேவாலய உறுப்பினர்களுடன் தங்கியிருந்தார். ஏனெனில், அவருக்கு உடன்பிறப்புகள் இல்லை, பெற்றோர் இருவரும் இறந்துவிட்டனர்.

“மம்தா ஒன்றும் இல்லாமல் சிங்கப்பூருக்கு வந்தார், அதனால் அவருடைய எதிர்காலத்தைப் பாதுகாக்க நாங்கள் உதவ விரும்பினோம்” என்று சாங்கி பொது மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக் குழுவில் பணிபுரியும் 45 வயதான திருமதி ஜோசப் கூறினார்.

$45,000 செலவில் புது வீடு

இந்நிலையில், இந்த தம்பதியர் சுமார் $45,000 செலவில் கடந்த 2021 ஆம் ஆண்டு மம்தாவின் சொந்த ஊரில் பிளாட் வீட்டை வாங்கிக்கொடுத்தனர்.

மம்தாவின் புதுமனை புகுவிழாவிற்கு 2022 ஆம் ஆண்டில் முதலாளியின் முழு குடும்பமும் டார்ஜிலிங்கிற்கு பறந்தது.

முன்மாதிரி விருது

திருமதி மம்தாவிற்கும் அவரது முதலாளிக்கும் இடையிலான இந்த நெருங்கிய உறவுவுக்கு, “முன்மாதிரியான வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண் மற்றும் முதலாளி” என்ற விருதை திரு ஜோசப் ஹாரிசன் மற்றும் அவரது மனைவி லீன்ஸ் ஆகியோர் நேற்று (நவ.26) பெற்றனர்.

சமூக ஆதரவு மற்றும் பயிற்சிக்கான வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண் சங்கம் ஏற்பாடு செய்த மூன்றாவது ஆண்டு புலம்பெயர்ந்த வீட்டுப் பணிப்பெண் மற்றும் முதலாளி பாராட்டு தின நிகழ்வில் விருதைப் பெற்ற 18 ஜோடிகளில் அவர்களும் அடங்குவர்.

நன்றி தெரிவித்தார் மம்தா

தன்னையும் குடும்பத்தின் ஒரு உறுப்பினராக நடத்தியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் மம்தா.

திருமதி ஜோசப் கூறினார்: “மம்தா தான் எங்கள் முதல் மற்றும் கடைசி உதவியாளர்” என்றார்.

வெறும் 3 கிமீ உள்ள லிட்டில் இந்தியாவுக்கு செல்ல S$65 கட்டணமா? – இந்திய சுற்றுலா பயணிகள் விரக்தி