மலேசியா அரசின் அதிரடி அறிவிப்பு…. மகிழ்ச்சியில் இந்தியர்கள்!

Photo: Changi Airport

 

வரும் டிசம்பர் 01- ஆம் தேதி முதல் மலேசியாவுக்கு வருகைத் தரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

சிங்கப்பூரில் COVID-19 தொற்று.. உயிரிழந்த 13 மாத குழந்தை

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வது மற்றும் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தி வரும் மலேசியா அரசு, வரும் ஆண்டுகளில் விசாவில் பல்வேறு வசதிகளைக் கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் இருந்து முதலீட்டாளர்கள், சுற்றுலாப் பயணிகள் வருகையை ஊக்குவிக்கும் விதமாக வரும் டிசம்பர் 01- ஆம் தேதி முதல் மலேசியாவில் விசா இன்றி 30 நாட்கள் தங்கலாம் என்றும் இந்த திட்டம் 2024 நவம்பர் 30- ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் மலேசியா அரசு அறிவித்துள்ளது.

“வெளிநாட்டு ஊழியர்களின் சிரிப்பு ஒன்றே எங்களுக்கு மகிழ்ச்சியை தரும்”.. எகிறும் செலவினங்கள் – ஊழியர்களுக்கு உதவி செய்த நல்லுள்ளங்கள்

முன்னதாக, இலங்கை, வியட்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகளும் இந்திய சுற்றுலாப் பயணிகள் விசா இன்றி வரலாம் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.